பொன்மொழிகள்

ஒழுக்கம்! – பெரியார்

  • பக்தி என்பது தனிச்சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
  • பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
  • ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
  • மற்றவர்களிடம் பழகும் வித்தைகளையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.

கருத்து தெரிவிக்க