அழகு / ஆரோக்கியம்

இருமல் , சளியை போக்கும் சில இயற்கை வழிகள் !

பொதுவாக பருவ நிலை மாறினாலே பெரும்பாலோனோருக்கு சளி, இருமல் போன்றவை ஏற்பட்டு விடும். உடலில் வெப்ப நிலை அதிகரிக்கும் போது காய்ச்சலும் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே இலகுவாக இவற்றில் இருந்து விடுபடலாம். அவை பற்றி பார்ப்போம்.

இருமல் ஏற்படும் போது தொண்டை வலியும் வந்து விடும்.  இதற்கு காலையில் எழுந்ததும் மெல்லிய சூடான நீரில் உப்பு கலந்து வாயைக் கொப்பளித்து வர வேண்டும். இதனால் இருமல், தொண்டை வலி, தொண்டையில் ஏற்படும் வீக்கம் போன்றவை குணமாகும். சளியையும் குறைக்கும்.

இஞ்சி இருமலை இலகுவாக போக்கவல்லது. சிறு துண்டு இஞ்சியை எடுத்து அதில் உப்பு கலந்து மெதுவாக மென்று சாப்பிட்டு வரலாம். அதனுடன் துளசி இலையையும் சேர்த்து கொண்டால் இன்னும் நல்லது. இதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.

சின்ன வெங்காயம் ஒன்றை நன்றாக அரைத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தேசிப்புளி, சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் இறக்கி ஆற வைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து பருகி வந்தால் இருமல் சளி குணமாகும்.

ஒரு சட்டியில் 100 மி.லீ. தேன் விட்டு அதன் அடர்த்தி குறையும் வரை சூடாக்கவும். பின் ஒரு தேக்கரண்டி தேசிப்புளியும், சிறிதளவு கறுவாப் பட்டை தூளும் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

சூடான பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் சளி இருமல் குணமாகும். சிறுவர்கள். பெரியவர்கள் அனைவருக்கும் நல்லது.

இருமல், சளி இருக்கும் போது அடிக்கடி சூடான நீரைப் பருகி வந்தாலும் சிறந்த பலனைப் பெறலாம்.

 

கருத்து தெரிவிக்க