உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணிலை சந்திக்க மாட்டேன்- சஜித் பிரேமதாஸ

ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இன்று ரணில் விக்கிரமசிங்க அழைத்திருக்கும் கலந்துரையாடலில் தாம் பங்கேற்கப்போவதில்லை என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அவரின் நெருங்கிய ஆதரவாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

தாமே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என்று தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து வருகின்ற நிலையில் அவருடன் பேச்சு நடத்துவதற்கு அவசியம் இல்லை என்று சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இறுதி நேரத்தில் இந்த தீர்மானத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது ரணிலின் நெருங்கிய சகாவான அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, சஜித் பிரேமதாஸவே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என்று கடுமையான வாதத்தை முன்வைத்தார்.

குருநாகலில் இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தில் சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவு பெருகியிருந்தமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் ரணில் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தநிலையிலேயே சஜித் பிரேமதாஸவுடன் இன்று இரவு 9 மணிக்கு அலரிமாளிகையில் சந்திப்புக்கு மலிக் சமரவிக்கிரம ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்

கருத்து தெரிவிக்க