விளையாட்டு செய்திகள்

இங்கிலாந்து அணியுடனான போட்டியில் அவுஸ்திரேலியா முன்னிலை

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஏஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மென்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

இதில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 497 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

ஸ்மித் 211 ஓட்டங்களை பெற்றார்.

தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 4-வது நாளான இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 301 ஓட்டங்களை எடுத்துள்ளது.

அவுஸ்திரேலியா அணி தனது 2-வது இன்னிங்சில் 196 ஓட்டங்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.

கருத்து தெரிவிக்க