பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு வீரர்; அப்துல் காதிர் நேற்று மாரடைப்பு காரணமாக லாகூரில் மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 63. பாகிஸ்தான் அணிக்காக 67 டெஸ்டுகளில் விளையாடி 236 விக்கெட்டுகளும், 104 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 132 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.
1987-ம் ஆண்டு லாகூரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர்.
1983 மற்றும் 1987-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று இருந்தார்.
கருத்து தெரிவிக்க