வாழ்க்கையில் துன்பங்களை எதிர்கொள்ளும் போது பலர் எளிதில் பாதிப்படைந்து சோர்ந்து போய் விடுகின்றனர். இதிலிருந்து விடுபடுவதற்கு மனதினை ஒருநிலைப்படுத்தல் அவசியம். உடற்பயிற்சி மூலம் உடல் எவ்வாறு ஆரோக்கியமாக பலமாக இருக்கிறதோ,அதைப்போன்றே மனதும் ஒருநிலை படுத்தும் போது பலமடைகிறது. இவ்வாறு உறுதியுள்ள மனம் எந்த சூழ்நிலையிலும் துன்பங்களை கண்டு துவளாமல் தைரியத்துடன் இருக்கும்.
வாழ்க்கையில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் பெற நாம் நிகழ்காலத்தில் வாழப் பழக வேண்டும். மனதை ஒருமுகப்படுத்துவதால் பல நன்மைகளை அடையலாம். முக்கியமாக மனது உங்களுக்கு மிகவும் எளிதாக கீழ்ப்படியும். இந்த ஆற்றலை வளர்த்துக் கொள்ள உங்கள் மனதை பயிற்றுவிக்க வேண்டும். இதன் மூலம் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.
உங்கள் எண்ணங்களை கட்டுப்படுத்த இயலும்.
மனதில் அமைதி உண்டாகும்.
பயனற்ற மற்றும் எரிச்சல் தரும் எண்ணங்களில் இருந்து விடுபடலாம்.
சிறந்த நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள உதவும்.
தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
கவனம் செலுத்துவதற்கான ஆற்றல் அதிகரிக்கும்.
மன வலிமையையும் மகிழ்ச்சியையும் தரும்.
மிக விரைவாக கற்கும் திறனையும் புரிந்து கொள்ளும் ஆற்றலையும் அதிகரிக்கச் செய்யும்.
கற்பனைகளை காட்சிப்படுத்தும் ஆற்றலும் அதிகரிக்கும்.
கருத்து தெரிவிக்க