உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

மட்டு.மாவட்டத்தில் மினி சூறாவளியால் பாதிக்கபட்டடோருக்கு 16 இலட்சம் நிதி உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1ஆந் திகதி மற்றும் ஆகஸ்ட் 16 ஆம் திகதி நிலவிய அசாதாரண காலநிலையின் போது பலத்த சுழல் காற்றினால் 161 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருந்தன.

இதற்கான நிவாரணப்பணிகளை அரசாங்கம் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை உணரப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் பணிப்பின் பெயரில் தேசிய அனர்த்த நிவாரண நிலையத்திற்கூடாக 1.6 மில்லியன் நிதியினை உடனடியாக விடுவித்து இச்சுழல் காற்றில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 10000ரூபா காசோலை கரடியனாறு பிரதேசத்தில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபரால் வழங்கி வைக்கப்பட்டது.

சுழல் காற்றில் கிரான் வவுணதீவு வெல்லாவெளி பட்டிப்பளை ஆகிய பிரதேசங்களே அதிகமாக பாதிக்கப்பட்ட கிராமங்களாகும்.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம அதிதியாக கலந்து பாதிக்கப்பட்டோருக்கு காசோலை வழங்கி வைத்தார்

கருத்து தெரிவிக்க