உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ஐ.தே.கவின் அறிவிப்பு வெளியான பின்பே சம்பந்தனின் சதுரங்க ஆட்டம் ஆரம்பம்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு திட்டம் உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளது.

இதற்கான ஆவணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிப்படுத்தியுள்ளது என்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் பேச்சுகள் ஆரம்பமாகும் என்றும் தெரியவருகின்றது.

இலங்கையில் நவம்பர் மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு பின்னர் வேட்பு மனு  அறிவித்தல் வெளியாகும்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஜே.வி.பியும் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்டுள்ளன. சுதந்திரகட்சி வேட்பாளரை களமிறக்காது என்பது ஏரத்தாள உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அறிவிப்புக்காகவே பல தரப்புகளும் காத்திருக்கின்றன.

செப்டம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என  அக்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்ற வினாவுக்கும் விடையறிய பலரும் முற்படுகின்றனர்.

அனைத்து வேட்பாளர்களுடனும் பேச்சு நடத்திவிட்டுஇ சர்வதேச நாடுகளின் தூதவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னரே கூட்டமைப்பு தமது முடிவை அறிவிக்கும் என கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க