ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளால், அதன் பங்காளிக் கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன.
இந்தநிலையில் இன்று பங்களாகிக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளன.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான இழுபறிகள் நீடிப்பதால், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியை உருவாக்குவதிலும் இழுபறிகள் காணப்படுகின்றன.
இதனால் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான முடிவை விரைவாக எடுக்க வேண்டும் என்று ஐதேக தலைமைக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
சஜித் பிரேமதாச தாமே ஜனாதிபதி வேட்பாளர் என பரப்புரை செய்து வருகின்ற நிலையில், நேற்று தாமே போட்டியிடவுள்ளதாக ரணில் விக்ரமசிங்கவும் அறிவித்துள்ளதானது, ஐதேகவின் பங்காளிக் கட்சிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐதேகவின் உள்முரண்பாடுகளால், தமது கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற அச்சமும், அதன் விளைவாக அரசியலில் தமது எதிர்காலம் குறித்த அச்சமும் பங்காளிக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், ஜனநாயக தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளனர்.
கருத்து தெரிவிக்க