- தானம் தருபவரைவிட அதனைப் பெறுபவரின் இயல்பைப் பொறுத்தே தானத்தின் தகைமை உயர்கிறது. மழை நீரானது காய்ச்சிய இரும்பின் மீது வீழ்ந்தால் சுண்டிப் போய்விடும். தாமரை இலையிலே வீழ்ந்தால் விழுந்தபடியே இருக்கும்.
- சிப்பியிலே வீழ்ந்தால் முத்தாக விளையும்.
மாம்பழம் பழுத்தால் கிளிகளும் குயில்களும் உண்ணும். வேம்பு பழுத்தால் காக்கைகள் மட்டுமே சுவைக்க முயலும். அதுபோல, உத்தமன் தேடிய திரவியத்தை மேலோர் அனுபவிப்பர். தீயவன் திரட்டிய செல்வத்தைத் தீயவர் பின் அனுபவிப்பர். - ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து பழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.
கருத்து தெரிவிக்க