தமிழகத்தில் இருந்து குணா
———-
ஏழரையில் சனி ஏற்படுத்தும் தாக்கங்களை பார்ப்பதற்கு முன்னர், வாழ்வின் அடிப்படை நியதியொன்றைப் பார்ப்போம்.
ஏனெனில் சனியை புரிந்துக்கொள்ள இது அவசியமாகும்.
இல்லையெனில் “பக்குவம்” “பக்குவமின்மை” என்ற கண்ணாடியின் ஊடாக சனியை பார்க்கமுடியாது.
நாம் எந்தவொரு செயலை செய்தாலும் அந்த செயலைப்பொறுத்தே விளைவு…. அதாவது பயன் அமைகிறது.
நன்மை செய்தால் நன்மையும் தீமை செய்தால் தீமையும் வருகிறது.
ஆனால் எது நல்லது….?;;;; எது கெட்டது…? என்பதை என்பதை பிரித்துணரும் பக்குவம் வேண்டுமே.
பயிரிடுவது சிறப்பான உழைப்பே… ஆனால்?
பெற்ற பிள்ளைகளிடம் பாசத்தைக்காட்ட பணத்தைக்காட்டுவது தவறில்லை. ஆனால்?
பிறரிடம் நம்பிக்கை வைப்பது தவறில்லை. ஆனால்….?
மேற்குறிப்பிட்ட வாக்கியங்களை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.
முதல் பகுதி எளிதில் புரியும். இரண்டாம் பகுதியில் வரும் “ஆனால்”? களுக்கு பின்னிருக்கும் கேள்விக்குறிகளுக்கான பொருளை புரிந்துக்கொள்ளாமல் தவித்தோம் என்றால், நாம் பக்குவமடையவில்லை என்று பொருள்.
உணர்ந்தால் பக்குவம் பெற்றுவிட்;டோம் என்று அர்த்தம்.
இதில் முதல் பகுதி- ஏழரையில் நடப்பது. இரண்டாம் பகுதி- ஏழரையை கடந்து நடப்பது.
அதாவது பயிரிடுவது சிறந்த உழைப்பே. ஆனால்..? பாலைவனத்தில் விதைத்தால் வீணே.
பிள்ளைகளிடம் பாசத்தைக்காட்ட பணத்தை பயன்படுத்துவது தவறில்லை. ஆனால், பணத்தை மட்டுமே காட்டினால் பாசத்தின் மதிப்பு அவர்களுக்கு புரியாமலேயே போகும்.
பிறரிடம் நம்பிக்கை வைப்பது தவறல்ல. ஆனால் குருட்டு நம்பிக்கை வைப்பது தவறே.
முழுமையடைந்த இந்த வாக்கியங்களின் அர்த்தங்களை உணர எமக்கு இந்த ஏழரையே உதவும்.
இந்த அனுபவப்பாடங்கள் ஏழரை சனியில் மாத்திரமே கிடைக்கவும் செய்யும்;.
எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் முப்பது வயதுக்குள் ஏழரையை கடந்தே ஆகவேண்டும்.
அதனால்தான் முப்பதைக் கடந்தவர்கள் ஒரு சில பக்குவங்களுடன் இருப்பதற்கான காரணம்.
ஏன்? சிறுவயதிலேயே பக்குவம் அடைந்தவர்கள் இல்லை என்றால் இல்லையென்றே சொல்லி விடலாம்.
நெருப்பென்றால் சுடும் என்று குழந்தை தொட்டுப் பார்த்துதானே தெரிந்துக்கொள்கிறது.அதுபோல்தான் அனைத்தும்.
அப்படியென்றால், தெய்வக்குழந்தை திருஞானசம்பந்தர், சிறுவயதிலேயே பக்குவமடைந்த வள்ளலாரும்… ரமணரும் என்றெல்லாம் நீங்கள் மடக்க நினைக்காதீர்கள்.
அவர்கள் இறைவன் அளித்த கொடை…..
உலக வாழ்வையே துறந்தவர்களிடம் உலகியல் அனுபவங்களை எவ்வாறு எதிர்ப்பார்க்கமுடியும்?
நெருப்புமே அவர்களை சுடாதபோது, நெருப்பு சுடும் என்ற அனுபவத்தை அவர்களிடம் எவ்வாறு அவர்களிடம் காண இயலும்.
சரி, ஏழரைக்கு வருவோம். முதலில் ஏழரையை தெரிந்துக்கொள்வோம்.
ஒருவர் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்ததாய் வைத்துக்கொள்வோம்.
அப்படியெனில் மேஷமே அவரது ராசியாகும்.
இந்த மேஷத்துக்கு பன்னிரண்டாம் ராசியில் அதாவது மீனத்தில் சனி நுழையும்போது மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது.
இப்படி 12, 1, 2ஆம் இடங்களில் ஒவ்வொரு ராசியிலும் சரியாக இரண்டரை வருடக்காலம் பயணிக்கிறார்.
12இல் விரய சனியாகவும் 1இல் ஜென்ம சனியாகவும், 2இல் வாக்கு சனியாகவும் செயற்படுகிறார்.
12இல் குடும்பத்தில் கலகம், தேவையற்ற பேச்சினால் விரயம், தகாத பேச்சினால் எதிரிகளை சம்பாதித்தல், சிறைவாசம் அனுபவித்தல், தாய்மாமன் பகையாகுதல், தந்தையின் பொருளியல் மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்படுதல் போன்ற பலன்கள் ஏற்படுவது மாத்திரமன்றி, அதிஸ்டமும் கெட்டுப்போகும்.
1இல் நடக்கும் ஜென்ம சனியில் ”;தான்” என்ற அகந்தையில் தவறான முடிவுகளும், புத்திபலத்தை மட்டுமே நம்பி, அனுபவசாலிகளின் மற்றும் சான்றோரின் கூற்றுக்களை மறுப்பது, சொந்த தொழிலில் சரிவு, பணியிடங்களில் மந்தம் ஏற்படுவது மற்றும் பிறரால், அவமானங்களை அனுபவிப்பது போன்ற பலன்கள் ஏற்படும்.
2இல் நடக்கும் வாக்கு சனியால், படிப்பு நாசம் அடைதல், வம்பு வழக்குகள் ஏற்படுதல், வீடு வாகனத்தால் பாதிப்பு ஏற்படுதல், தாயின் ஆரோக்கியம் கெடுவது போன்ற பாதிப்புக்கள் ஏற்படலாம்.
மேற்கூறிய பலன்களை நாம் மீண்டும் ஒருமுறை படித்து பார்த்தால், ஒரு விஷயம் விளங்கும்.
எல்லாம் நமது பக்குவம் அடையாத புத்தியினால் நடக்கிறது என்பது தௌ;ளத்தெளிவாக புரிகிறதா..?
ஏழரை நடக்கும்போது தொடக்கூடாததை தொட்டு, பின் கெட்டு நாம் தெளிவடைகிறோம்.
செய்யக்கூடாததை செய்து துன்பங்களை அனுபவி;த்து பின் சிறப்பாகிறோம்.
அதனால்தான் முதல் ஏழரைச்சுற்று நமக்கு துயரமாக தெரிகிறது.
ஆனால் இரண்டாம் சுற்று ஏழரையோ, நாம் அனுபவசாலிகளாக இருக்கும்போது வருகிறது.
எதை செய்யவேண்டும்; எதை செய்யக்கூடாது என்ற தெளிவுடன் செயல் ஆற்றுகிறோம்.
இந்த பக்குவத்துடன் இருப்பதால்தான், நமது செயல்கள் வெற்றி;ப்பெற்று பலனைத்தருகின்றன.
எனவேதான் இரண்டாம் சுற்று ஏழரை இனிப்பாக தெரிகிறது அவ்வளவே.
அர்த்தாஷ்டம சனியாகிய நான்காம் இடத்து சனி கூட இப்படித்தான்.
ஆனால் அஷ்டம சனி அப்படியல்லவே.
அது உண்மையில் சனி பகவான் கொடியவரோ? என்ற கூட சிந்திக்கவைக்கும்.
அது ஏன்? என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்;……….
கருத்து தெரிவிக்க