உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

‘தகவல் அறியும் உரிமையை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும்’

சர்வதேச ஊழல் ஒழிப்பு அமைப்பு இலங்கையை தகவல் அறியும் உரிமையை உறுதி செய்வதற்கான உறுதிப்பாட்டை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

நாட்டிற்கு “சில முன்னேற்றம் தேவை” என்பதை அவ்வமைப்பின் சமீபத்திய ஆய்வு தெரிவிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

‘சுதந்திர தகவல் ஆலோசகர் வலையமைப்பு’ (FOIAnet) மேற்படிஇந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது என Transparency International Sri Lanka (TISL) குறிப்பிட்டுள்ளது .

செயல்திறன்மிக்க வெளிப்பாட்டிற்காக இலங்கை சிவப்பு மதிப்பெண் பெற்றுள்ளதுடன் நிறுவன நடவடிக்கைகள் மற்றும் கோரிக்கைகளை செயல்படுத்தும் விடயத்தில் மஞ்சள் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் விபரம் தொடர்பில்  சிவப்பு (குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தேவை), மஞ்சள் (சில முன்னேற்றம் தேவை) மற்றும் பச்சை (சிறிய முன்னேற்றம் தேவை) என குறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க