உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் மாபெரும் போராட்டங்கள் நடத்த தீர்மானம்

2009ம் ஆண்டு இறுதி போரில் உயிருடன் படையினாரிடம் ஒப்படைக்கப்பட்ட எங்களுடைய உறவினர்கள் உயிருடன் இருக்க வேண்டும்

அவர்களுடைய மீட்புக்காக சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடகிழக்கில் வெள்ளிக்கிழமை 30.08.2019 மாபெரும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன

இதில் அனைத்துத் தரப்புக்களும் எம்முடன் இணைந்து போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு வட கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அழை்பபு விடுத்துள்ளனர் .

யாழ்.ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு மாகாணத்தில் ஓமந்தையிலும் கிழக்கு மாகாணத்தில் கல்முனையிலும் காலை 10.00 மணிக்கு கவனயீா்ப்பு போராட்டத்தை நடாத்தவுள்ளோம்.

ஓமந்தை மற்றும் வட்டுவாகல்கல்முனை பகுதிகளில் போரின் இறுதியில் படையினர் கூறியதற்கு அமைய உயிருடன் எங்களுடைய பிள்ளைகளைஉறவுகளை ஒப்படைத்தோம்.

ஒப்படைக்கும்போது அவர்கள் உயிருடன் இருந்தார்கள்.அவர்களை பேருந்துகளில் கொண்டு சென்றார்கள்கள்அவர்கள் எங்கேஅவர்கள் எமக்கு வேண்டும்.

போர் நிறைவடைந்து 10 வருடங்களின் பின்னும் அரசாங்கம் அவர்கள் தொடர்பாக எந்தவொரு தகவலையும் எங்களுக்கு கூறவில்லை

எனவே நாங்கள் கொண்டு சென்று ஒப்படைத்த எங்களுடைய உறவினர்கள் எங்கேஅவா்களை வெளிப்படுத்துங்கள் எனகேட்டு நாங்கள் எங்கள் உறவுகளை ஒப்படைத்த ஓமந்தை மற்றும் கல்முனையில்,

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை ஒட்டியதாக இந்த பாரிய கவனயீா்ப்பு போராட்டத்தை நாங்கள் நடாத்தவுள்ளோம்.

இதில் பல்கலைக்கழக மாணவர்கள்பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடாத்த ஒத்துழைக்கவேண்டும்

என தயவாக கேட்டுள் கொள்கின்றோம் என்றார்.

கருத்து தெரிவிக்க