உள்நாட்டு செய்திகள்புதியவை

‘பிணைமுறி மோசடி விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தல்’

2015 ல் இடம்பெற்ற மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (ஆகஸ்ட் 28) அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

குறித்த மோசடி தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் புலனாய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.

தற்போது, நான்கு இடைக்கால அறிக்கைகள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள அறிக்கைகள் டிசம்பர் மாதத்திற்குள் அவரிடம் ஒப்படைக்கப்படும் என்று ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை மத்திய வங்கி சமர்ப்பிக்காததால், இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

விசாரணைகளை தாமதப்படுத்துவது நீதிக்கு சேவைக்கு பெரும் தடையாக இருப்பதாக ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

கருத்து தெரிவிக்க