உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள் ஆர்பாட்டம்

சம்பள உயர்வு உட்பட 11 அம்சக் கோரியை முன்வைத்து கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள் புதன்கிழமை (28) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்ற குறித்த நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கல்விசாரா ஊழியர்சங்க உறுப்பபினர்கள் நிருவாக சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

பயனுள்ள ஓய்வூதியத் திட்டத்தை அமுல்ப்படுத்து, கல்விசாரா ஊழியர்களின் பதவியுயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு முறையினை சீர்செய், நிறுத்திவைக்கப்பட்ட மொழித் தேர்ச்சி கொடுப்பனவை உடனே வழங்கு, 876வது சுற்றுநிருப்த்தை உடனடியாக ரத்துச் செய், பயனுள்ள ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்து, மாதாந்த இழப்பீட்டுத் தொகையை 75 வீதமாக அதிகரி, பல்கலைக் கழக சமூகத்திற்க பொதுக் காப்புறுதி முறையை அமுல்ப்படுத்து, ஏற்றுக்கொள்ளப்பட்ட 107 சதவீத சம்பள அதிகரிப்பை 2020ல் பல்கலைக் கழக ஊழியர்களுக்கு வழங்கு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டம் தொடர்பாக கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர் சங்க செயலாளர் தங்கவேல் சிறிதர் கருத்து தெரிவிக்கையில் – பல்கலைக்கழக ஊழியர் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அடிப்படை சம்பளத்தில் காணப்படும் முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வது தொடர்பாக 2019.07.30 அன்று தொழிற்சங்க ஒன்றியம் ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டது.

31.12.2015 தினத்தன்று அமுலில் இருந்த அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் 2016ம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் 10,000 ரூபாவை சேர்த்து திருத்தம் செய்தவேளை 91.18 சதவீத சம்பள அதிகரிப்பும், அரச சேவைகள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட வாரியங்கள் சபை ஆகிய நிறுவனங்களின் அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் 2016ம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் 10,000 ரூபாவை சேர்த்து திருத்தம் செய்தவேளை 107 சதவீத சம்பள அதிகரிப்பும் காணப்படுவதில் இருக்கும் 15 சதவீத முரண்பாட்டை பல்கலைக்கழக சமூகத்தின் அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கும்படி சாதகமான விதத்தில் அறிவித்திருந்தோம்.

அதன்பின்னர், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ இரான் விக்ரமரத்ன உள்ளிட்ட முகாமைத்துவ சேவைகள் திணைக்கம் மற்றும் சம்பளம் மற்றும் பதிவு ஆணையம் ஆகியவற்றுடன் 2019.08.16 அன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி கல்வியணிசாரா ஊழியர் சங்க சம்மேளனமும், நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்க சம்மேளனமும் இதன்போது கலந்துகொண்டனர்.

சுற்றுநிருபம் வெளியிடப்பட்டதன் ஊடாக கல்வியணிசார் அணியில் உதவி பேராசிரியர்கள் முதல் விரிவுரையாளர்கள் மற்றும் பதிவாளர் முதல் வேலை உதவியாளர் வரை இப்பிரச்சினை தீவிரமடைந்துள்ளமை இங்கு விளக்கமாகக் கூறப்பட்டது.

அதன்போது இந்த முரண்பாட்டை நிவிர்த்திசெய்வதற்கு பொருத்தமான அறிக்கையை 2019.08.21 அன்று இடம்பெறும் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சர் அவர்களால் கூறப்பட்டது.

மேலும் கௌரவ அமைச்சர்களான மங்கள சமரவீர, ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் தொழிற்சங்க ஊழியர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடலின்போது சம்பள முரண்பாடு பற்றிய எந்தவொரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை.

இதன்போது மேற்குறிப்பிட்ட அமைச்சர்களால் 2019.08.22 மாலை 4.00 மணிக்கு முன்பதாக இதுதொடர்பான அறிக்கையை தொழிற்சங்க தலைவர்களுக்கு வழங்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

எனினும், 2019.08.21 அன்று பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கையின்படி பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் ஆகிய பதவிகளுக்கு 2020.01.01 அன்று 107 சதவீத ஆகக் காணப்பட வேண்டிய பெறுமதி 102.07 சதவீத ஆகக் குறைந்துள்ளது.

இது எமது தொழிற்சங்கத்தால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும்.

செய்யப்படவேண்டிய விடயம் சம்பள முரண்பாட்டை நிவிர்த்திசெய்ய வேண்டியதே ஆகும்.

அதாவது அனைத்து அரச தாபனங்கள், மற்றும் கூட்டுத்hபனங்களுக்கு 2020.01.01 அன்று 107 சதவீத ஆக வழங்கப்படவிருக்கும் அடிப்படை சம்பள உயர்வை பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் வழங்குவதே ஆகும். என்றார்.

????????????????????????????????????

கருத்து தெரிவிக்க