நேர்காணல்கள்

தமிழர்களுக்கு உயர்சபை ஒன்று அவசியம் -ஓய்வுநிலை பேராசிரியர் எம் கருணாநிதி

1987ஆம் ஆண்டில் இருந்து 1991ஆம் ஆண்டு வரை நுவரெலியாவில் ஆசிரியராக பின்னர் அதிபராக சேவையாற்றியவர்.
1991 இல், கொழும்பு பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக சேர்ந்துக்கொண்டவர்.
இதன்போது தேசியக் கல்வி சம்பந்தமாக ஆராயும் வாய்ப்பை பெற்றவர்.
இதன்படி 7 ஆண்டுகளாக “நெரிக்”; என்ற தேசிய கல்வி ஆராச்சி மதிப்பீட்டு நிலையத்தின் பணிப்பாளராக செயற்பட்டு 20மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டவர்.
தேசிய கல்வி ஆணைக்குழுவின் பல ஆய்வுகளிலும் பங்குபற்றியுள்ளவர்.
2001ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழக கல்விப்பீடத்தில் பேராசிரியராக பதவியுயர்வை பெற்றவர்
மலையகத்தில் பல ஆண்டுகள் சேவையாற்றிதன் அடிப்படையில் அவர் பல அனுபவங்களை கொண்டிருக்கிறார்.
அத்துடன் தமது கலைமுதுமாணி கற்கையிலும் மலையகம் தொடர்பான ஆராச்சியையே முன்வைத்தவர்.
இவரே ஓய்வுநிலை பேராசிரியர் எம் கருணாநிதி.
“ஊடகன்”; செய்தி;த்தாள் கடந்த வாரம் முதல் பிரசுரித்து வருகின்ற, “மலையகக்கல்வி அன்றும் இன்றும்”; என்ற தலைப்பின்கீழ் கடந்த வாரம் ஓய்வுநிலை பேராசிரியர் சந்திரசேகரம் தமது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார்
.
இந்தநிலையில் இந்த வாரம், ஓய்வுநிலை பேராசிரியர் எம்.கருணாநிதியின்  கருத்துக்களும் பரிந்துரைகளும் இடம்பெறுகின்றன.
“பெருந்தோட்ட பிரதேசத்தில் 14வருடங்கள் பணியாற்றியமையால்,  ஆசிரியர் சமூகம், மாணவர்கள், அரசியல் மற்றும் பொருளாhதாரம் தொடர்பான தெளிவான விளக்கம் எனக்கு இருக்கிறது”
1977ஆம் ஆண்டுக்கு முன்னர் மலையகத்தில் கல்வி வளர்ச்சி மிகக்குறைந்த நிலையே காணப்பட்டது.
எனினும் 1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் மலையக சமூகம், தேசிய அரசியலில் ஈடுபட்டமையால் கல்விக்கான முக்கியத்துவம் அதிகரித்தது.
1977- 1994ஆண்டு காலப்பகுதியில் மலையகக் கல்வி துரித வளர்ச்சியை கண்டது.
பாடசாலைகள் படிப்படியாக அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டன.
1984ஆம் ஆண்டு முதல், “சீடா” ஜிடிஇசெட் அமைப்புக்கள், பாடசாலைகளின் உட்கட்டமைப்பில்; மேம்பாடுகளை ஏற்படுத்தின.
இதே காலக்கட்டத்தில், ஆசிரியர் சேவைக்குள் பெருந்தோட்ட மாவட்டங்களில் கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தர மற்றும் உயர்தரத்தில் சித்தியெய்தியவர்கள், உள்வாங்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உட்பட்ட வடக்குகிழக்கில் இருந்து வந்து ஆசிரியர் சேவையில்; ஈடுபட்டவர்கள், பெருந்தோட்ட மாவட்ட கல்வியில் இருந்து படிப்படியாக வெளியேறினர்.
கல்வி அமைச்சின் பெருந்தோட்ட அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம், மலையக கல்வி வளர்ச்சிக்கு உதவிகளை செய்ய ஆரம்பித்தது.
பாடசாலைகளின் தரம் முன்னேற்றம் தொடர்பில், ஸ்ரீபாத கல்விகல்லூரி கொட்டக்கலை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவை உருவாக்கப்பட்டன.
1994ஆம்; ஆண்டு பெருந்தோட்ட மாவட்ட பகுதிகளில், பெண்கள் மத்தியில் கல்வித்தொடர்பில் பாரிய விழிப்புணர்வு மற்றும் ஆர்வம் தோன்றுகிறது.
வன் ஏபிபாடசாலைகளின் தொகை அதிகரித்தன.
கல்விப்பொதுத்தராதர உயர்தரத்தில் அதிக மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர்.
ஐந்தாம் ஆண்டு பரீட்சையின் பெறுபேறுகளில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இதில் உச்சக்கட்டமாகவே, 2017, 2018ஆம் காலப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட மலையக மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார்கள்.
அத்துடன் பெருந்தோட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள், கல்வி நிர்வாகப்பொறுப்பை ஏற்றுள்ளனா.;
அத்துடன் கல்வி நிர்வாக சேவைகளில் சித்தியடைந்துள்ளனர்.
எனவே மலையகக்கல்வி 6 தசாப்த காலத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை கூறலாம்.
எனினும் பாரிய பிரச்சினைகளாக முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் நிலவுகின்றன.
கணிதம் விஞ்ஞானம் அழகியற்கல்வி போன்ற பாடங்களை கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை.
நியமிக்கப்படும் ஆசிரியர்களும் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை.
இதன்காரணமாக நகரப் பாடசாலைகள் பெற்ற வசதிகளை கிராமப்புறப் பாடசாலைகள் பெறவில்லை.
முன்னர் வெளி மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள், மலையக பிரதேசங்களுக்கு வந்தபோது மாற்று சமூகத்தை பற்றி அறிந்து கலாசார பகிர்வுடன் சேவையாற்றக்கூடிய நிலை இருந்தது.
எனினும் ஆசிரியர் நியமனங்கள், சொந்த பிரதேசங்களிலேயே மேற்கொள்ளப்படுகின்றபோது,  சமூகம் தொடர்பான புரிந்துணர்வை அது அதிகளவில் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன
.
ஆனால் எதிர்ப்பார்த்த அளவுக்கு அங்கு பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.
பொதுவாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின்படி பெருந்தோட்டங்களில் இருந்து நகரப்பகுதிகளுக்கு இடமாற்றம் பெறும் ஆசிரியர்கள், பெருந்தோட்டங்களை திரும்பிப் பார்க்க விரும்புவதில்லை.
அதாவது அவர்கள், நகர மயத்துக்கு மாறுகின்றனர்.
அவர்களின் மனோநிலையில் ஒப்பீட்டளவில் சமூகம் தொடர்பான பார்வை பெரியளவில் விரிவடையவில்லை.
மாறாக தாம்,  இருந்து வந்த சமூகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு அவர்களால் உதவமுடியாதுள்ளது.
2000இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி 2ஆம் மற்றும் 3ஆம் நிலைப் பாடசாலைகளில் அடைவுமட்டங்கள் மிகக்குறைவாகவே உள்ளன.
இந்தநிலையில் கல்வி வாய்ப்புகள் குறைந்த பாடசாலைகளுக்கே மாணவர்கள், இன்றும் சென்றுக்கொண்டிருக்கின்றனர்.
எனவே இந்த பாடசாலைகளுக்கு உரிய ஆசிரியர் பகிர்வு மிக முக்கியமான அம்சமாக உள்ளது.
அத்துடன் பெருந்தோட்ட கல்வி வளர்ச்சிக்கு சமூக உணர்வுடன் செயற்படக்கூடிய ஆசிரியர்களே இன்று அதிகளவில் தேவைப்படுகின்றனர்.
முன்னர் வடக்குகிழக்கு பகுதிகளில் இருந்து பெருந்தோட்ட மாவட்ட பாடசாலைகளுக்கு வந்த ஆசிரியர்கள், தொழிலுக்காக பயிற்றப்படவில்லை.
தற்போது ஆசிரியர்கள் பயிற்றப்படுகின்றனர்
எனினும் இந்த வாய்ப்புக்கள் சமூக அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படுகிறதா? என்பது கேள்வியாகவே தொக்கி நிற்கிறது.
ஆசிரியர் பயிற்சிகளின்போது கல்வித்திட்டத்தி;ன்படி சிறந்த ஆசிரியர்களாக இருக்கவேண்டும் என்றே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மாறாக, யதார்த்தத்தை புரிந்துக்கொண்டு அந்தப்பயிற்சிகளின்போது ஆசிரியர்கள் மத்தியில் சமூக உணர்வு விதைக்கப்படவேண்டும்.
அந்த உணர்வு, பயி;ற்சி ஆசிரியர்கள் மத்திலும் உருவாகவேண்டும்.
ஸ்ரீபாத கல்வியில் கல்லூரி மற்றும் கொட்டக்கலை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகள் இந்த திட்டங்களை முன்னெடுக்கலாம்.
யாழ்ப்பாணம் மட்டக்களப்பு உட்பட்ட வடக்குகிழக்கு பிரதேசங்களில்; இன்று கல்வி வீழ்ச்சி;ப்போக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சூழ்நிலைகள்  இதற்கான காரணம் என்பது யாவருக்கும் தெரியும்.
எனினும் பெருந்தோட்டங்களில் கல்வியில் பின்னடைவு ஏற்படவில்லை. முன்னேற்றமே உள்ளது
இதனை விருத்தி செய்யவேண்டும்.
ஒரு சமூகத்தில் துரித மாற்றம் ஏற்படுவதற்கு ஆசிரியர்களே “உந்துவிசையாக” இருக்கின்றனர்.
மலையகத்தை பொறுத்தவரையில் ஆசிரியர் சேவைக்கு வருகின்றவர்கள் தொழிலுக்கு அப்பால் அர்ப்பணிப்புடன் செய்கின்றபோதே நாம் எதிர்ப்பார்க்கின்ற சமூக முன்னேற்றம், சமூக மாற்றம் துரிதமாக உருவாவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படும்.
இதனை ஆசிரியர்கள்; புரிந்துக்கொள்ளவேண்டும்.
பெருந்தோட்டங்களின் பெற்றோர்கள் இன்று தமது பிள்ளைகளின் கல்விக்கு பெருந்தொகையை செலவு செய்வதில் நாட்டம் காட்டிவருகின்றனர்
இது, கல்வியல் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை நன்கு வெளிப்படுத்தி நிற்கிறது
ஆசிரியர்களுக்கு இன்று கற்பித்தல் கடமைகளை காட்டிலும் வேலைப்பளு அதிகம்,
தமிழகத்துடன் ஒப்பிடுகையில் வருமானமும் குறைவு. நேரமும் இல்லை.
ஆசிரியர் சேவை என்பது இன்று அர்ப்பணிப்பு என்ற நிலையில் இருந்து மாறி பலரை உள்வாங்கும் தொழிலாக மாறிவிட்டது.
சிறந்த கல்வித் தகமைகளை கொண்ட புத்திஜீவிகள் ஆசிரியர் சேவைக்கு வருவதில்லை.
ஏனைய துறையினருக்கு வேதனம் அதிகரிக்கும்போதே, ஆசியர்களுக்கும் வேதனம் உயர்த்தப்படுகிறது.
முகாமைத்துவ கொள்கையின்படி ஆசிரியர்களுக்கான வேதன உயர்வு என்பது தற்காலிக ஊக்குவிப்பு மாத்திரமே.
சிங்கப்பூர் மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகளில் புத்திஜீவிகளே ஆசிரியர்களாக வருகின்றனர்.
இதன்போது ஏனைய துறையினருக்கு வழங்கப்படும் உயர் வேதனம் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
ஆசிரியர்களை பொறுத்தவரை அவர்களுக்கு அகஊக்கம் இருத்தல் அவசியம். இதன்போதே அவர்கள் தமது கல்வி அறிவை மேலும் அதிகரித்து சிறந்த வருமான மட்டத்தை அடையமுடியும்
.
பெருந்தோட்ட மாவட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் இன்று உயர்கல்வி கற்கைகளை மேற்கொண்டு தம்மை வளப்படு;த்துவது போற்றத்தக்கது.
பல்கலைக்கழகங்களை பொறுத்தவரையில் இன்று தேசிய கொள்கையின்படி 6 வீதம் ஒதுக்கப்படவேண்டும் என்ற காரணத்தினால் விரிவுரையாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் அதிக வேதனம் வழங்கப்படுகிறது.
எனினும் பெருந்தோட்டப்புறங்களில் இருந்து பேராசிரியர்களாக கடமையாற்றியவர்கள் ஒய்வுப்பெற்றபோது அடுத்தக்கட்டத்துக்கு பேராசிரியர்களாக மலையத்தில் இருந்து  ஒருசிலரே வந்துள்ளனர்.
இது பாரிய இடைவெளியை ஏற்படுத்திவிட்டது.
மாணவர்களை பொறுத்தவரையில் இன்று அவர்களுக்கு ஆசிரியர்களின் சிறந்த வழிகாட்டல்கள் அவசியமாகும்.
மாணவன் ஒருவனை சிறந்த துறைக்கு செல்வதற்கு வழிகாட்டவேண்டியது ஆசிரியருடைய கடமையாக உள்ளது.
இதுவே அவனை சமூகத்தில் சிறந்த பிரஜையாக மாற்றும்.
விட்டுப்போன இடங்களை நிரப்ப கல்விப்பிரிவில் ஒரு குழு இருக்கவேண்டும்.
மலையகம் என்பதைக்காட்டிலும் இன்று நிர்வாகத்துறையில் ராஜதந்திரத்துறையில் மலையகம் மாத்திரமல்ல வடக்குகிழக்கு என்று ஒட்டுமொத்த தமிழர்களின் இருப்பும் கேள்விக்குரியதாகியுள்ளது.
இன்று மலையகத்தை சேர்ந்த இருவர்; மாத்திரமே ராஜதந்திர சேவையில் உள்ளனர்.
அவர்களுக்கு பின்னர் இந்த சேவைக்குள் வர மலையகத்தில் மாத்திரமல்ல. வடக்குகிழக்கில் இருந்தும் யார் வருவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே இந்த விடயத்திலும் இன்றைய மாணவர்களும் தமிழ் சமூகமும்; அக்கறை செலுத்தவேண்டும்.
இலங்கையில் ஏனைய வளர்;ச்சியடைந்த சமூகங்களுக்கு மத்தியில் இன்று வடக்குகிழக்கு பெருந்தோட்ட மலையக சமூகம் என்று தமிழர் சமூகம் கல்வியால், பதவியால், பொருளாதாரத்தால், வளர்ச்சியின்றியும் பின்னடைந்தும் போயுள்ளது.
இதனை சீர்படுத்தவேண்டுமானால் தமிழ் புத்திஜீவிகள் மத்தியில் இருந்து ஒரு கல்வி ஆலோசனை குழு உருவாதல் அத்தியாவசியமானது.
இலங்கை, ஒரு பன்மைத்துவ நாடு. எனினும் அந்த பன்மைத்துவத்தின் அடிப்படையில் அனைத்து விடயங்களும் இடம்பெறுவதில்லை.
எனவே தமிழர்களுடைய கல்வியை உயர்த்த தமிழர் மத்தியில் ஒரு பொறிமுறை தேவை.
அத்துடன் நிர்வாகத்துறையில் உள்ள வெற்றிடங்களை உரியவகையில் நிரப்பி தமிழர் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் அவசியமாகவுள்ளன.
எனவே இதற்கு உயர்கல்வி மிகவும் அவசியமாகியுள்ளது.
இந்தநிலையில் தமிழர்களின் கல்வி,; பொருளாதாரம், நிர்வாகசேவை, போன்றவற்றை தகுந்தமுறையில் நிரப்பிக்கொள்ள ஓய்வுப்பெற்ற மற்றும் தற்போதைய பேராசிரியர்கள் மற்றும் புத்திஜீவிகளை கொண்டு தேசிய ரீதியிலான அமைப்பு ஒன்று உடனடியாக அவசியமாகிறது.
இதற்கான ஆயத்தங்கள் விரைவில் செய்யப்படவேண்டும்.
இந்த அமைப்பின் ஊடகவே தேசிய கல்வி, தேசியக்கொள்கை என்பவற்றுக்கு அப்பால், தமிழர்களுக்கான சந்தர்பங்களை பெற்றுக்கொடுக்கமுடியும்.
இது காலத்தின் அவசரமான அவசியமாகும்.
அத்துடன் இந்தவிடயம் அவசரமாக கருத்தாடல்களுக்கு உள்வாங்கவேண்டிய விடயமாகவும் அமைந்துள்ளது.

கருத்து தெரிவிக்க