நேர்காணல்கள்

மலையக பேராசியர்கள் உருவாக பல ஆண்டுகள் செல்லும் –  ஓய்வுநிலை பேராசிரியர் சந்திரசேகரன்

மலையகத்தின் கல்வி அன்று முதல் இன்று வரை முன்னேற்றம் கண்டிருக்கிறதா?
ஆம்இ என்றால் எந்தளவு முன்னேற்றத்தை கண்டிருக்கிறது?
இல்லையெனில், அதற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராயும் முகமாக இந்த ஆராய்வுத்தொடர் ஆரம்பிக்கப்படுகிறது.
இந்த தொடரில் கல்விமான்கள் தமது கருத்துக்களை ஆரம்பித்து வைக்க அது தொடர்பிலும் அதற்கு மேலும் கல்விமான்கள், உட்பட்ட வாசகர்கள், தமது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்று “ஊடகன்” எதிர்பார்க்கிறது.
இந்தநிலையில் மலையகத்தின் அன்றைய கல்விமுறை எனும்போது அது வெறுமனே தோட்டப்பாடசாலைகள் என்ற அடிப்ப மட்டுப்படுத்தப்பட்டது
நகர்புற ஆங்கில பாடசாலைகள் என்ற வகையிலேயே இருந்துவந்தமையை கேள்விப்பட்டிருக்கிறோம்.
இதனைப்பற்றி பேராசிரியரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் கல்விப்பீட தலைவருமான சோ சந்திரசேகரன் தமது கருத்துக்களை ஊடகனுடன் பகிர்ந்துக்கொள்கிறார்.
19ஆம் நூற்றாண்டுக்காலப்பகுதியை பொறுத்தவரையில் மலையக மக்களுக்கான கல்வி ஒழுங்குப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
இதற்கு காரணம், இந்தியாவில் இருந்து பெருந்தோட்டங்களுக்கு கூலிகளாக வந்தவர்கள் வருவதும் திரும்பிப்போவதுமாக இருந்தமையாகும்.
இந்தநிலையில் கங்காணிகள் தின்னைப்பாடசாலைகளை நிறுவினர்.
1904-05ஆம் ஆண்டுக்காலப்பகுதியிலேயேதான் மலையக மக்களுக்கான கல்வி புகட்டலுக்கான சட்;டம் பிரித்தானியரால் இயற்றப்பட்டது.
பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் இந்திய நாடாளுமன்றத்திலும் கேட்கப்பட்ட கேள்விகளை அடுத்தே இலங்கையில் உள்ள பிரித்தானிய அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கான கல்விமுறையை கொண்டு வந்தது.
இதற்கமைய சுமார் 70 ஆண்டுகளாக பெருந்தோட்ட மக்களின் கல்வி பெருந்தோட்ட நிர்வாகங்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
1960 ஆம் மதப்பிட்டின்படிஆண்டுக்காலப்பகுதியில்தான் பெருந்தோட்டப் மாணவர்களில்; ஐந்து வீதமானவர்கள், நகர்புறங்களில் உள்ள பாடசாலைகளில் படிக்க ஆரம்பித்தனர்.
நகர்ப்புற பாடசாலைகளில் வசதிக்கொண’ pந்தனைக்கொண்ட பெருந்தோட்ட மாணவர்கள் நடந்தே வந்துப்படித்தனர்.
எனினும் நகர்ப்புற மாணவர்களுடன் இணைந்து போட்டியிட முடியாத நிலையில் அவர்கள் இருந்தனர்.
ஆங்கிலக்கல்வியே அதற்கு பிரதான காரணமாகும்.
பதுளையில் கல்வி வளர்ச்சி என்று கூறுகின்றபோது 1960 களில் படித்து பட்டம் பெற்றவர்களை வைத்து மதிப்பிடமுடியாது.
ஏனெனில் அன்று பதுளையில் இருந்து உருவான போராசிரியர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் படித்தவர்களாவர்.
பேராசிரியர் சின்னத்தம்பி, தம்பிஐயா, ராமசாமி,
பதுளையில் படித்து பட்டம் பெற்றவர்கள் லண்டன் நித்தியாநந்தன் முன்னாள் கல்விப்பணிப்பாளர் கணேசன் போன்றோர் இதற்கு உதாரணமானவர்கள்.
மலையகத்தைப்பொறுத்தவரை அன்று கல்விப்பொதுத்தராதர  உயர்தரம் என்பது தெரியாதக்கல்வியாகவே இருந்தது.
பதுளையில் ஆங்கிலக்கல்வி இருந்தது.
இந்தநிலையில் யாழ்ப்பாணத்துக்கு போய் பார்த்தபோது முழுமையான உயர்மட்ட மாணவர்களே இருந்தனர்.
முழுமையாக சைவப் பாடசாலையாக இருந்த மகாஜனா கல்லூரியில் மாணவர்கள் நன்றாகவே ஆங்கிலம் பேசினர்.
பல்கலைக்கழக மாணவர்கள் இடைக்கிடையி;ல் பாடசாலைக்கு வந்துப்போகும் பழக்கம் அங்கு இருந்தது. அது பாடசாலை பிள்ளைகளுக்கு ஒரு கல்விக்கான உந்துதலை வழங்கும் நடவடிக்கையாகவே அமைந்திருந்தது.
பதுளையி;ல் அன்று பட்டதாரிகள் கல்வி கற்றுக்கொடுக்கவில்லை.
யாழ்ப்பாண பட்டதாரிகள் அதுவும் இந்தியாவில் படித்தவர்களே பதுளையில் கற்பித்தார்கள்.
மலையகத்தின் கண்டியில் பேராதெனிய பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டபோதும் அதனை மலையக பெருந்தோட்ட மக்கள் அறிந்திருக்கவில்லை.
1965ஆம் ஆண்டு பகுதியில் பதுளையில் உயர்தர வகுப்புக்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்டன.
1970 பகுதியில் ஊவாக்கல்லூரியில் இருந்து சிலர் பல்கலைக்கழகம் செல்கின்றனர்.
தமிழரசுக்கட்சியினால் மலையக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
வன்னியசிங்கம் பெயரில் வழங்கப்பட்ட இந்த புலமைப்பரிசிலைப் பெற்று மலையகத்தவர் பலர் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்றனர்
எனது  தந்தை வர்;த்தகர் என்றபடியால் பதுளையில் இருந்த யாழ்ப்பாண மக்கள் என்னை யாழ்ப்பாணத்தில் படிக்கவைக்க உதவினர்.
வெலிமடையில் உள்ளவர்களும் யாழ்ப்பாணத்தில் படித்தனர்.
படித்தவர்களுக்கு யாழ்ப்பாணத்தி;ல் மதிப்பு இருந்தது. எனவே தம்மை ஒரு மலையகத்தவர் என்ற அடிப்படையில் அங்கு எவரும் பார்க்கவில்லை.
நான் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்றுப் பின்னர் யாழ்ப்பாணத்தில் கற்பித்தலிலும் ஈடுபட்டேன்.
1980ஆம் ஆண்டுக்காலப்பகுதியின் பின்னர் மலையகத்தில் 300 பாடசாலைகளுக்கு சீடா என்ற சுவீடிஸ் நிதியுதவியுடன் கட்டிடங்களை அமைப்பதற்கு அரசியல்வாதிகளே காரணமாக இருந்தனர்.
முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவருமான சௌமியமூரத்தி தொண்டமானுக்கு இதில் முக்கிய இடம் உண்டு.
அதேபோன்று பத்தனை ஸ்ரீபாத கல்லூரியை தோற்றுவித்தலிலும் தொண்டமானின் சிறப்பு பங்கு இருந்தது.
அன்றும் இன்றும் மலையகத்தின் கல்விக்கு அங்குள்ள அரசியல்வாதிகள் காத்திரமான பங்காற்றலை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.
எனினும் சௌமியமூர்த்தி தொண்டமானின் அரசியலில் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் இன்னும் கல்வி வளர்ச்சிக்கான உந்துதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்
என்றாலும் அன்று இந்தியாவில் வந்த மக்களில் 7 லட்சம் பேரை திருப்பியனுப்பும் நடவடிக்கை உட்பட்ட விடயங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது தொழிற்சங்கவாதிகள் கல்வியி;ல் அக்கறை செலுத்தவில்லை என்றக்கருதலாம்.
நாட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே வடக்குகிழக்கின் ஆசிரியர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச்சென்றனர்.
மலையகத்துக்கு  இன்று விஞ்ஞானத்துறையிலும் கணிதத்துறையிலும் ஆசிரியர்கள் குறைவு,
இதற்காக தமிழகத்தில் இருந்து ஆசிரியர்கள் வரவழைப்பது சிறந்த திட்டமாக இருக்காது.
அவ்வாறு அழைக்கப்பட்டாலும் அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டே அவர்கள் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவேண்டும்.
ஆசிரியர் நியமனங்களை பொறுத்தவரை தற்போது பாடசாலை மட்ட நியமனங்களே மேற்கொள்ளப்படுகின்றன.
பொதுவில் பெண்கள் அதிகமாக ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்கள் இந்த தொழிலில் ஈடுபடாமைக்கு இலங்கையில் கவர்ச்சியான வேதனம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமையே காரணமாகும்.
இந்தியாவை எடுத்துக்கொண்டால் பயிற்றப்பட்ட ஆசிரியர் ஒருவரின் வேதனம்  இலங்கை ரூபாவில் ஒரு லட்சம் ரூபாவரை வழங்கப்படுகிறது.
எனினும் இலங்கையில் 6ஆயிரம் ரூபாவுக்கும் ஆசிரியர்கள் உள்ளனர்.
பெண்களை பொறுத்தவரை இன்று கல்வியில் முன்னேறி வருகின்றனர்
எனினும் ஆண்கள் “கவனக்கலைப்பான்| விடயங்களில் அதிகமாக கவனத்தை செலுத்துகின்றனர்.
மலையக்கல்வியின் குறிகாட்டியின்படி ஏனைய சமூகங்களை காட்டிலும் மலையக சமூகத்தின் கல்வி வளர்ச்சி குறைவாகவே உள்ளமையை அறிந்துக்கொள்ளலாம்.
உயர்கல்வியை கற்பிக்கும் வன் ஏபி பாடசாலைகள் எனப்படும் 25 பாடசாலைகள் மாத்திரமே மலையகத்தில் உள்ளன.
அதாவது 10 லட்சம் பேருக்கு 25 பாடசாலைகளே உள்ளன.
எனினும் இலங்கையின் ஏனைய சமூகப்பிரிவினருக்காக 1030 வன் ஏபி பாடசாலைகள் இருக்கின்றன.
சுரியாக பார்த்தால் மலையகத்தில் இருந்து இரண்டாயிரம் பேர்வரை பல்கலைக்கழகம் செல்லவேண்டும்.
எனினும் 500க்கும் குறைவான தொகையிலேயே பல்கலைக்கழகம் செல்லும் மாணவரின் தொகை உள்ளது.
ஏனைய சமூகப்பிரிவினரைப் பொறுத்தவரை உயர்க்கல்வி ஒரு கலாசாரமாக மாறவிட்டது.
எனவே அந்த சமூகத்துடன் 50 வருடங்களுக்கு பின்னரே உயர்க்கல்வியில் இணைந்துக்கொண்ட மலையக சமூகத்துக்கு அதனை துரத்திப்பிடிப்பது என்பது யதார்த்தமல்ல.
எனினும் அந்த கலாசார மாற்றத்துக்கான அடித்தளம் கூட இன்னும் இடப்படவில்லை.
இதனால் மலையக சமூகம் கல்வி நச்சு வளையத்தில் தொடர்ந்தும் இருந்துக்கொண்டிருக்கிறது.
மாணவர்களில் இருந்து தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் உருவாகவேண்டும். அது நடக்கவில்லை என்பதால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மாணவர்கள் பாதிக்கப்படுவதன் காரணமாக தகுதிப்பெற்ற ஆசிரியர்கள் சமூகத்துக்கு கிடைக்காமல் போய்விடுகின்றனர்.
இந்த கல்வி நச்சு வளையத்தை உடைக்க மலையகத்தின் அரசியல் தலைமைகளிடமே அதிகாரங்கள் குவிந்துள்ளன.
எனவே அந்த தலைமைகள் அசாதாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த நச்சுவளையத்தை உடைத்தெறியவேண்டும்.
பல்கலைக்கழக ஆசிரியர்களின் எண்ணிக்கை 5300ஆக உள்ளது.
இதில் மலையகம் சார் ஆசிரியர்களின் எண்ணிக்கை வெறும் 25 மாத்திரமே.
அதிலும் மலையத்தை சார்ந்த ஒரே ஒரு பேராசிரியரே கடமையில் இருக்கிறார்
புவியியில்துறைப் பேராசிரியரான விஜயசந்திரனே அவராவார்.
முன்னர் பேராசிரியர், சந்திரசேகரன், சின்னத்தம்பி, தனராஜ் மற்றும் மூக்கையா ஆகிய பேராசிரியர்கள் பணிகளில் இருந்தனர். இதில் தனராஜ் தலவாக்கலையி;ல் ஒரு பெருந்தோட்ட தொழிலாளியின் மகனாவார்.
அவர்கள் இன்று  ஓய்வுப்பெற்றுவிட்டனர்.
இந்தநிலையில் எதிர்காலத்தில் சந்திரபோஸ்,  சோபனாதேவி, சேனாதிராஜா, கலா, ராஜதுரை மற்றும ரமேஸ் போன்றவர்கள் பேராசிரியர்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
எனினும் இது விரல்விட்டு எண்ணக்கூடியதாகவே உள்ளது.
இதில் மாற்றம் வேண்டும் மலையகத்தவர் பலர் பேராசிரியர்களாக உருவாகவேண்டும்.
ஒரு சமூகம் முன்னேற ஆய்வுகளும் ஆராச்சிகளும் அவசியம்.  அவற்றை முன்னெடுத்துச்செல்ல மலையகம் சார்பில் இன்று வெற்றிடங்கள் உள்ளன.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு செல்கின்றபோது 1980ஆம் ஆண்டுகளில் தொழிற்சங்கத்திடம் தரவுகள் இருக்கவில்லை.
இதன்போது பேராசிரியர் சின்னத்தம்பியே அதனை செய்துமுடித்து முதலாளிமார் சம்மேளனத்துடன் சௌமியமூர்;த்தி தொண்டமான் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உதவினார்.
அதேபோன்று இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு பெல்ஜியம் நாட்டின் நிபுணர்களின் உதவியுடன், முன்னாள் ராஜாங்க அமைச்சர் பீபீ தேவராஜின் தலைமையில் மலையக பேராசிரியர்கள் குழுவினர் இணைந்து தமது பங்களிப்பை செய்தனர்.
ஏற்கனவே மலையகத்தைப்பற்றிய ஆய்வு நூல்கள் என்று 130 நூல்கள் எழுதப்பட்டுள்ளன.
அந்த எண்ணிக்கை இன்னும் பல்கிப்பெருகவேண்டும்.
மலையகத்தில் தனியாக பல்கலைக்கழகம் உருவாகவேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 10 ஆண்டுகளாக மேலாக தாம் வலியுறுத்தி வருகின்றபோதும் இன்னும் அது அரசியல் தலைமைகளால் முன்னெடுத்துச்செல்லப்படவில்லை.
அந்த கோரிக்கைக்கான முழுமையான ஆவணங்கள், தற்போது அமைச்சர் மனோ கணேசனிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அவர், உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் பேசி மலையக பல்கலைக்கழக விடயத்தை முன்கொண்டு செல்லவேண்டும்.
பல தேர்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த சந்தர்ப்பத்தை மலையகத்தின் அரசியல் தலைமைகள் நழுவவிட்டுவிடக்கூடாது என்றும் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் ஊடகன் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
இந்தநிலையில் மலையகத்தின் கல்வி என்ற விடயத்தில் அன்றும் இன்றும் என்ற தலைப்பின்கீழ் தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுமாறு  அனைவருக்கும் “ஊடகன்” திறந்த அழைப்பை விடுக்கிறது.

கருத்து தெரிவிக்க