இஸ்லாமிய பெண்களின் முகத்தை மூடிய ஆடைகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளும் தடைவிதித்துள்ள வியப்பான செய்தி வெளியாகியுள்ளது.
“புர்கா” என்ற முகத்தை மூடிய ஆடைகளை அணியக்கூடாது என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளும் உத்தரவிட்டுள்ளனர்.
வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
வட ஈராக்கின், மொன்சூல் நகரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதியே இந்த உத்தரவை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விடு;த்துள்ளனர்.
அண்மைக்காலமாக இஸ்லாமிய பெண்கள் அணியும் “புர்கா” மற்றும் :நிஹ்ஹாப்” ஆகிய ஆடைகளை அணிந்தநிலையில் ஐஎஸ்ஐஎஸ் தளபதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க