மத்திய வங்கி முறிவிற்பனை குற்றச்சாட்டின் பிரதானவராக கருதப்படும் அர்ஜூன் அலோசியஸ் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 75 மில்லியன் ரூபாய்களை அன்பளிப்பு செய்தார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.
இது 2015ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
கிடைத்துள்ள தகவல்களின்படி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டி 5ஆம் ஒழுங்கையில் உள்ள சொந்த வீட்டில் வைத்து இந்த பணம் இரவு 8 மணியளவில் கையளிக்கப்பட்டுள்ளது.
அர்ஜூன் அலோசியஸ், தமது வீட்டுக்கு வரும்போது அவரை உள்ளே அனுமதிக்குமாறு ரணி;ல் பாதுகாப்பு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி ரணிலை சந்தித்த அர்ஜூன் அலோசியஸ், அரை மணிநேரம் அங்கிருந்துள்ளார்
அத்துடன் ரணிலிடம் அறை ஒன்றில் வைத்து 75 மில்லியன் ரூபாய்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் இந்த பணப்பரிமாற்றம் தொடர்பில், மத்திய வங்கி முறி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவரும் சிங்கப்பூரில் தற்போது வசிப்பருமான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன், தகவல்கள் வெளியிட முன்வந்திருப்பதாகவும் ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க