கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழு முன்னிலையில் ஜனாதிபதி ஆஜராக மறுப்புத் தெரிவித்தால், தெரிவுக் குழு தனது இறுதி அறிக்கையை வெளியிட தயாராகவுள்ளதாக தெரிவுக் குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தெரிவுக் குழுவில் ஆஜராகுமாறு ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி குறித்த ஒரு தினத்தை ஒதுக்கித் தந்தால் அவரிடம் விசாரணை செய்ய தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இல்லாவிடின் குழுவின் இறுதி அறிக்கையை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 23 ஆம் திகதி நிறைவடையவிருந்தது.
இருப்பினும், அதனை செப்டம்பர் 30 ஆம் திகதி வரையில் நீப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க