உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

இயக்கச்சி மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக ஆய்வு

இயக்கச்சி சங்கத்தார் வயல் மீனவ குடும்பங்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வந்த வாழ்வாதார பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் வடக்கு மாகாணசபையின் முன்னாள் கல்வியமைச்சர் குருகுலராஜா மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் உள்ளிட்ட குழுவினர் நேரடியாக இன்று சென்று குறித்த மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வு செய்துள்ளனர்.

குறித்த பகுதி மக்கள் ஆனையிறவு பகுதியில் நன்னீர் இறால் பிடியில் ஈடுபட்டு வருகின்றவர்கள்.அப்பகுதிக்கு மழை காலங்களில் சுண்டிக்குளம் கடல்நீரேரி ஊடாக பாய்ந்து வருகின்ற நீரின் மூலம் அங்கு இரால் உற்பத்தி அதிகரித்து காணப்படும்। குறித்த இறாலை பிடித்து தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துகின்ற மக்களுக்கு கடந்த யுத்தத்தின் மூலம் சில இடர்பாடுகள் ஏற்பட்டது.

குறிப்பாக ஆனையிறவை மிகவும் பாரிய தளமாக வைத்திருந்த இராணுவத்தினர் குறிப்பிட்ட பகுதிகளை பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பாரியளவிலான மண் அனைகளை அணைத்து காவல் அரங்குகளையும் உருவாக்கியிருந்தனர்.

இதனால் குறித்த பாரிய அணையின் ஊடாகவு சுண்டிக்குளம் பகுதியில் இருந்து வருகின்ற நீர் தரவைப் பகுதிக்கு வருவது குறைவாக காணப்பட்டது। இதனால் இறால் உற்பத்தி குறைவாகக் காணப்படுவதாக குறிப்பிட்ட பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறிப்பிட்ட பகுதிக்கு நேரடியாக சென்று குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.

குறித்த விஜயத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குருகுலராஜா  பச்சசிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் மற்றும் உப தவிசாளர் கயன் உறுப்பினர்களான ரமேஷ், வீரபாகுதேவர் மற்றும் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உப தலைவர் அப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

குறித்த பிரச்சினைக்கான தீர்வினை குறிப்பிட்ட ஒரு 10 நாட்களுக்குள் தீர்த்து தருவதாக குழுவினர்கள் உறுதியளித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க