உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘யாழில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது’

யாழ் மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு, வேலை வாய்ப்பின்மை, ஆகியன முதன்மைப் பிரச்சனைகளாக இருப்பதால் இந்தப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டுமென்று சுட்டிக்காட்டியுள்ள மாவட்ட அரச அதிபர் வேதநாயகம் இதற்குரிய நடவடிக்கையை ஐனாதிபதி எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐனாதிபதியின் செயற்திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியியலாளர் சந்திப்பொன்று மாவட்டச் செயலகத்தில் இன்று நடாத்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் ஐனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் யாழ் மாவட்டத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் 804 திட்டம் ஆரம்பிக்கப்பட்டன.

அதில் மிக முக்கியமாக கிராம சக்தி, சிமாட் சிறிலங்கா, விவசாய மற்றும் தேசிய உணவு உற்பத்தி, தேசிய சுற்றாடல,; தேசிய போதை ஒழிப்பு, தேசிய சிறுநீரக நோய், மற்றும் பாடசாலை பேண்தகு அபிவிருத்தி, பிள்ளைகளை பாதுகாப்போம், விசேட தேவையுடையோர் முதியவர்களுக்கான திட்டங்கள் என 804 திட்டங்களின் வேலைகள் நடக்கின்றன.

யாழ் மாவட்டத்தைப் பொறுது;தவரையில் விவசாயம் மீன்பிடி மிக முக்கியமாக இருக்கின்றது। வன்செயல்கள் முடிவடைந்த பிற்பாடு எமது மாவட்டத்தில் நீர்ப்பிரச்சனை மிக முக்கிய பிரச்சனையாக இருக்கிறது। பல இடங்களில் நல்ல தண்ணீர் எடுக்க கஸ்ரமாக உள்ளது। அதற்கான திட்டத்தை ஐனாதிபதி ஆரம்பித்து வைக்க இருக்கின்றார்.

அதே போல வேலை வாய்ப்பின்மையும் மிக முக்கிய பிரச்சனையாக இருக்கின்றது। இதற்கு கடந்த காலங்களில் இரந்த தொழிற்சாலைகள் இயங்காதமையே பிரதான காரணமாக இருக்கின்றது। ஆகவே அந்தத் தொழிற்சாலைகளை மீள இயங்க வைக்க வேண்டும் அதனூடாக வேலைவாய்ப்பு பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும்.

மேலும் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது। இதனால் நீர்ப்பிரச்சனை ஏற்படுகிறது। அதே நேரம் ஓவ்வொரு வருடமும் திவகம் உட்பட பல இடங்கள் வறட்சியால் பாதிக்கப்படுகிறது। ஆகவே இவை அனைத்திற்கும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க