மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியிருந்த கருத்து தொடர்பில் உச்ச நீதிமன்றம் விவாதிக்கவுள்ளது.
பிரதம நீதியரசர் தொடர்பில் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கருத்து கோரல் தொடர்பான விசாரணை இன்று முற்பகல் ஆரம்பமானது.
மாகாண சபை எல்லை நிர்ணய குழுவின் மீளாய்வு அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை.
இதனால் பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளதா என ஜனாதிபதி, உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கோரியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் நீதியரசங்கள் குழு முன்னிலையில் ஆஜராகி வாய்மூல விளக்கங்களை வழங்கியுள்ளது.
இதேவேளை ஜனாதிபதியின் கருத்துக்கோரல் தொடர்பில் உச்ச நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க