அழகு / ஆரோக்கியம்

நீண்ட அடர்த்தியான தலைமுடியை பெறுவதற்கு சில வழிமுறைகள் !

இன்றைய இளம் தலைமுறையினரின் பிரதான பிரச்சினை தலைமுடி உதிர்தல். இது இளைஞர்களையும் இளம் பெண்களையும் பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது. இதில் இருந்து மீள சில எளிய இயற்கை வழிகளை கையாண்டாலே போதுமானது. அவை பற்றி பார்ப்போம்.

சிவப்பு செவ்வரத்தம் பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து முழுகி வந்தால் தலைமுடி உதிர்வது நின்று அடர்த்தியாக வளரும்.

செவ்வரத்தை இலையை நன்றாக அரைத்து தலையில் தேய்த்து முழுகினாலும் முடி அடர்த்தியாக வளரும்.

கறிவேப்பிலை, 4 சின்ன வெங்காயம். சிறிதளவு தயிர் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தாலும் நல்ல பலனைத் தரும்.

வெந்தயம் மற்றும் குன்றிமணி தூளை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து ஒரு கிழமைக்கு பின் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வது நிற்கும்.

மருதாணி, கறிவேப்பிலை, செவ்வரத்தை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவை அனைத்தையும் காய வைத்து தூளாக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து ஊற வைத்து பின் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வது நின்று அடர்த்தியாக வளரும்.

கருத்து தெரிவிக்க