உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சவேந்திர சில்வாவின் நியமனம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

போர்க்குற்றங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக்கியமை, அச்சத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த நகர்வு, இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பேரவையில் யோசனையை முன்வைத்த அமைச்சர் மங்கல சமரவீர போன்றவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் குற்றச்சாட்டுக்களுக்காக தண்டனையை வழங்காமல் ஜனாதிபதி சவேந்திர சில்வாவுக்கு முக்கிய பதவியை வழங்கியுள்ளார்.

இது சர்வதேச உரிமை மீறல் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க