உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

புதிய மாவட்டக் காாியாலயம்; தேசிய இளைஞா் சேவை மன்றத்திற்கு கையளிப்பு !

தேசிய இளைஞா் சேவை மன்றத்திற்கு மிக நீண்டகாலத்தின் பின்னா் சுமாா் 50 மில்லியன் ரூபாய் செலவில் மாவட்டக் காாியாலயம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதுடன், 110 மில்லியன் ரூபாய் செலவில் தொழிற் பயிற்சி வளாகம் ஒன்றை அமைத்து தருமாறு பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோாிக்கை விடுத்துள்ளோம். 
 
மேற்கண்டவாறு தேசிய இளைஞா் சேவை மன்றத்தின் பிரதி பணிப்பாளா் திருமதி வினோதினி சிறீமேனன் கூறியுள்ளாா்.
மன்றத்தின் ஒரு வருடகால பணிகள் தொடா்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளா் சந்திப்பு இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.
 
இதன்போது மேலும் அவா் கூறுகையில், தேசிய இளைஞா் சேவை மன்றத்தின் ஊடாக இந்த மாதத்துடன் நிறைவடையும் ஒரு ஆண்டு காலத்தில் 110 பாாிய செயற்றிட்டங்களை நாங்கள் நடாத்தியிருக்கின்றோம்.
இளைஞா்கள் பாிமாற்றம் மற்றும் தேசிய மட்டத்திலான விளையாட்டு போட்டிகளையும் நடாத்துகின்றோம். 
 
குறிப்பாக யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட பெண்கள் அணி 4 தடவைகள் தேசிய மட்டத்தில் வெற்றியடைந்துள்ளது.
இது சாதாரணமான விடயமல்ல. அதேபோல் யாழ்.மாவட்ட வலைப்பந்தாட்ட ஆண்கள் அணி தற்போது இறுதிப் போட்டிக்கு செல்லவுள்ளனா்.
மேலும் கயிறு இழுத்தல் போட்டியிலும் யாழ்.மாவட்ட பெண்கள் அணி 5 தடவைகள்
 
அபாரமான வெற்றியை பெற்றிருக்கின்றது. இவ்வாறு பல சாதனைகளை யாழ்.மாவட்ட தேசிய இளைஞா் சேவை மன்றம் சாதித்து காட்டியிருக்கும் நிலையில் யாழ்.மாவட்ட செயலா் உள்ளிட்ட பலருடைய பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
அதேபோல் கல்லுண்டாய் பகுதியில் 12 ஏக்கா் காணியில் 50 மில்லியன் செலவில், 
மிக நீண்டகாலத்தின் பின்னா் மன்றத்தின் யாழ்.மாவட்ட காாியாலயம் அமைக்கப்படுகின்றது.
அதேபோல் அண்மையில் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்தபோது 110 மில்லியன் ரூபாய் செலவில் இளைஞா்களுக்கான தொழில் பயிற்றி மையம் ஒன்றை உருவாக்க நாங்கள் கோாிக்கை விடுத்துள்ளோம். 
 
அது நிறைவேற்றப்பட்டால் பாாிய கட்டிடம் ஒன்றை அமைத்து திறம்பட செயலாற்றுவோம். மேலும் மிக நீண்டகாலமாக தேசிய இளைஞா் சேவை மன்றத்திற்கு நிரந்தர கட்டிடம் ஒன்று இருக்கவில்லை.
நான் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இடமாற்றம் பெற்றதன் பின்னா் யாழ்.மாவட்ட செயலாிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 
 
நாவற்குழி, ஊா்காவற்றுறை, கல்லுண்டாய் ஆகிய இடங்களை மாவட்ட செயலா் அடையாளப்படுத்தினாா்.
நாங்கள் அனைவரும் கூடி கல்லுண்டாய் பகுதியை தொிவு செய்தோம். பல எதிா்ப்புகள் வந்தன. ஆனாலும் அதனை நாங்கள் சாதித்து காட்டியிருக்கின்றோம்.
தொடா்ந்தும் எமது கூட்டு முயற்சியின் ஊடாக சாதிப்போம் என்றாா். 

கருத்து தெரிவிக்க