உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கடற்பகுதிகளில் கருமை நிறப்பொருட்கள்; ஆய்வு செய்ய நடவடிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு தொடக்கம் கொக்குளாய் வரையிலான கரையோர பகுதியில் கடல் நீர் நேற்றைய தினம் பிற்பகல் தொடக்கம் கருமை நிறத்துடனாக காணப்பட்டமை தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அரிகார சபையின் பொது முகாமையாளர் டர்னி பிரதீப்குமார தெரிவித்துள்ளார்.

கடல் நீர் கரைக்கு வரும் பொழுது அதனுடன் கருமை நிறப்பொருட்கள் கரை ஒதுங்கியிருப்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mulathive sea 001

இந்த பொருட்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொட்ரபிலான விடயங்களைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படும் என்று சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் டர்னி பிரதீப்குமார தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, முல்லைத்தீவு அலுவலகர்களுடன் தொடர்புகொண்டு அந்த அதிகாரிகள் மூலமாக இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் தற்பொழுது அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். இவர்கள் விரைவாக இதனை ஆராய்ந்து கொழும்பு தலைமையகத்திற்கு இது தொடர்பாக அறிக்கையிடுவர்.

Mulathive sea 002

இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை இன்று மாலைக்குள் மேற்கொள்வதற்கு நாம் திட்மிட்டுள்ளோம் என்றும் சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் டர்னி பிரதீப்குமார தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க