அழகு / ஆரோக்கியம்

குறட்டையில் இருந்து விடுபடுவதற்கான சில வழிகள் !

நீங்கள் உறங்கும் போது தொண்டை வழியாக வெளியேறும் காற்று, தொண்டையில் உள்ள  தளர்வான திசுக்களை அதிர்வுறச் செய்து குறட்டையை ஏற்படுத்துகிறது. சில இலகுவான வழிகளை கடைப்பிடித்தால் குறட்டையில் இருந்து விடுபடலாம். குறட்டை உறக்கத்தை கெடுப்பதில்லை என்றாலும் அது ஆரோக்கியமற்ற உடல் நிலைக்கு அறிகுறியாக இருக்கலாம். அவற்றுட் சில ,

1. உடற் பருமன்

2. மூச்சுக் குழாயில் அடைப்பு

3. உறங்கச் செல்லும் முன் மது அருந்துதல்

நீங்கள் அதிக உடற் பருமன் உடையவராக இருந்தால் இயல்பாகவே குறட்டைக்கு வழி வகுக்கும். அதிகளவான கொழுப்பு திசுக்களை வளரச் செய்கின்றது. இது சுவாசத்தை கடினமாக்கும். உடற் பயிற்சி செய்வதன் மூலமும். உணவுப் பழக்கத்தாலும் ஆரோக்கியமாக இருந்து குறட்டையில் இருந்து விடுபடலாம்.

மதுபானம்  தொண்டையில் உள்ள தசையை தளர்த்தி குறட்டையை ஏற்படுத்தும். எனவே மது அருந்துவதை முழுமையாக தவிர்க்கவும். அல்லது உறங்கச் செல்லும் முன் சில மணித்தியாலங்கள் மது அருந்துதலை தவிர்க்கவும்.

சரியான உறக்கம் இல்லாமல் நீண்ட நேரம் வேலை செய்தாலும் குறட்டையை ஏற்படுத்தும். ஒரு மனிதன் 8 மணித்தியாலங்கள் நித்திரை கொள்ள வேண்டும்.

உடலில் நீர்த்தன்மை வற்றி இருந்தால்  மூச்சுக் குழாய், தொண்டை திசுக்கள் ஒட்டி விடும். இது அதிக குறட்டையை ஏற்படுத்தும். பெண்கள்  11 கப் தண்ணீரும், ஆண்கள் 16 கப் தண்ணீரும் அருந்த வேண்டும்.

இந்த இலகு வழிகளை கடைப்பிடித்தால் குறட்டையில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

கருத்து தெரிவிக்க