உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

வேலை நாள் குறைப்பு: மஸ்கெலிய பகுதி தொழிலாளர்கள் விசனம்

தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக தேயிலை கொழுந்தின் வளர்ச்சி குறைவடைந்துள்ளது.

இதனால் மஸ்கெலிய பகுதியில் உள்ள பெருந்தோட்ட பகுதிகளில் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளராகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வழமையாக தமக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் ஆறு நாட்கள் வேலை வழங்கப்பட்டு வந்ததாகவும் தற்போது வாரத்தில் நான்கு நாட்களே வேலை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தேயிலை செடிகளில் கொழுந்தின் வளர்ச்சி குறைவடைந்து காணப்படுவதால் ஒரு நாள் பெயருக்கான பறிக்க முடியாது என இது குறித்து தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கொழுந்தின் வளர்ச்சி குறைவடைந்தாலும் தாம் ஒரு நாள் பெயருக்கு 16 தொடக்கம் 18 கிலோ வரையிலான கொழுந்து பறிக்க வேண்டும் அது குறைவடையும் பட்சத்தில் தமக்கு அறை பெயர் போடப்படுவதாகவும் (750÷ 2 =375) தொழிலாளர்கள் விசனப்படுகின்றனர் .

இதனால் தாம் பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகவும் மாதத்தில் 16 தொடக்கம் 18 நாட்கள் வேலை செய்து தங்களது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத நிலையில் சில பெண் தொழிலாளர்களும் வெளியிடங்களுக்கு தொழில் தேடி செல்கின்றனர்.

இதற்கு கூட்டு ஒப்பந்த தொழிற்ச்சங்கங்கள் தமக்கு உரிய தீர்வு பெற்றுகொடுக்குமா ? என அப்பகுதி தொழிலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர் .

கருத்து தெரிவிக்க