பாதுகாப்பு துறையினர் அரசியல் தேவைகளுக்கு அடிபணியாது சுயாதீனமாகவும் அச்சமின்றியும் செயற்பட வேண்டும் என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் பிரியந்த ஜயகொடியின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது சில காவல்துறை அதிகாரிகள் அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப செயற்படுகிறார்கள். இவ்வாறு அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக உண்மைகளை வெளிப்படுத்தாது விட்டால் காவல்துறை சேவையின் முக்கியத்துவம் அழிவுக்குள்ளாகும்.
பொது மக்கள் மத்தியில் காணப்படுகின்ற சந்தேகம் , அச்சம் என்பவற்றை நீக்கி நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு காவல்துறை அதிகாரிகளுக்கு அத்தியாவசியமானது.
எனவே காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு அதிகாரிகளும் தமது கடமையை முறையாக முன்னெடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்து தெரிவிக்க