உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

ஊவா மாகாணத்திற்கான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஊவா மாகாணத்திற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

துண்கிந்த, தியலும, இராவணன் நீர் வீழ்ச்சி உள்ளிட்ட இயற்கை சுற்றாடலை கண்டு களிப்பதற்கும், தொடரூந்து மூலம் எல்ல ஆற்று பாலம் மற்றும் கதிர்காமம் ஆலயங்களிளை வழிபடுவதற்கும் இந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

தற்பொழுது இப் பிரதேசத்திற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் வடக்கு, கிழக்கு பொதுமக்களும் பெருமனவில் வருகை தருகின்றனர்.

ஹோட்டேல் மற்றும் சுற்றுலா விடுதிகளின் வருமானம் அதிகரித்துள்ளது.

நீர் வீழ்ச்சிகள், நீர்த் தேக்கம், மற்றும் பதுளுஓயா நீர் மட்டம் திடீரென அதிகரிப்பதனால் இந்த இடங்களில் நீராடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கல் பாறைகளில் அமர்வதும் ஆபத்தானதாகுமென்று பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க