முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் பரந்தாமன் விளையாட்டுக்கழகத்திற்கு வழங்கப்பட்ட காணி தொடர்பில் பிரதேச மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
அதன் நிர்வாகத்தினால் துப்பரவு பணி மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பற்ற முறையில் எரியூட்டப்பட்டதனால் அயற்காணியில் பெருமளவான பயன்தரு மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கற்சிலைமடு 3ம் கண்டம் வலது கரைப்பகுதியில் 1970 ம் ஆண்டுகளிலிருந்து பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்த காணி 1998 ஆண்டு ஏற்பட்ட யுத்த சூழ்நிலை மற்றும் 2009ம ஆண்டு யுத்த சூழ்நிலை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.
குறித்த காணியினை அரசியல் செல்வாக்கில் மேற்படி விளையாட்டுக்கழக நிர்வாகம் பெற்று அதனுடன் இருந்த பெருமளவான தென்னை பனை மற்றும் பலா போன்ற மரங்களை கனரக வாகனங்கள்கொண்டு அழித்துள்ளது.
மேலும், குறித்த காணியில் பாதுகாப்பற்ற முறையில் எரியூட்டியதனால் அருகிலுள்ள காணிகளில் பெருமளவான பயன்பதரு மரங்கள் தீயில் கருகி அழிவடைந்துள்ளன.
இது தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடுகள் செய்யப்பட்டுளள்போதும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க