உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

சந்தாப்பணம் உயர்வுக்கு எதிர்ப்பு; சாமிமலை பகுதியில் கையெழுத்து வேட்டை!

தமக்கு  வழமையாக அறவிடப்பட்டு வரும் தொழிற்ச்சங்க சந்தாவை  எவ்வித காரணத்தினாலும் கூடுதலாக அறவிட கூடாது என சாமிமலை பகுதியை சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் கையொப்பமிடப்பட்ட  மகஜர் ஒன்றை தோட்ட காரியாலயங்களில்   10/08/2019 அன்று கையளித்துள்ளார்கள்.

இதுவரை காலமும் எங்களது சம்பளத்தில் அறவிடப்பட்டு வந்த தொழிற்ச்சங்க சந்தா 150/= ரூபாவை கடந்த மாதம் முதல் 233/= ரூபாவாக அறவிடுமாறு இ .தொ .கா தொழிற்ச்சங்கத்தில் இருந்து தோட்டக் காரியாலயங்களுக்கு அறிவித்தல் கடிதங்கள் வந்திருப்பதாக அறிந்தோம்.

எனவே  குறித்த தோட்டத்தில் பணி புரியும் தொழிலாளர்களாகிய நாங்கள் இத்தால் தெரிவித்துக் கொள்வது எந்த காரணத்தினாலும் எங்களின் சம்பளதுதில் தொழிற்ச்சங்க சந்தா குறித்த தொகையை விட மேலதிகமாக அறவிட வேண்டாம் என இதன் கீழ் கையொப்பமிட்டுள்ளோம் என  கையொப்பமிடப்பட்டு தோட்டக் காரியாலயங்களில் சமர்பித்துள்ளனர்.

மேலும், அதன் பிரதியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  தலைமை காரியாலயம் அட்டன் தொழில்  திணைக்களத்திற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாமிமலை மஸ்கெலிய பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட சில தோட்டங்களில் கடந்த மாத சம்பளத்தில் இ .தொ .கா உறுப்பினர்களுக்கு தொழிற்ச்சங்க சந்தா  233/= ரூபாய் அறவிடப்பட்டதையடுத்து அப்பகுதி தோட்டத்தொழிலாளர்கள் தோட்டக்காரியாலயங்களுக்கு முன்பாக குறித்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து இப்பகுதியில் உள்ள ஏனைய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு  ஆகஸ்ட் மாதம் முதல்  233/= ரூபாய் சந்தா அறவிடபடவுள்ளதாக தகவல் கிடைத்தது அடுத்தே இந்த கையெழுத்து வேட்டை  இடம்பெற்றுள்ளது.             

கருத்து தெரிவிக்க