ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டமை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலாக அமையாது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொலன்னாவையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முழு நாட்டினரும் ஆதரவளிக்க கூடிய வகையிலான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பெயரிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் துன்பங்களை உணர்ந்த அதேவேளை, சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை பெறகூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடவுள்ளதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க