சினிமா

இரண்டு தேசிய விருதுகள் பெற்றுள்ள நானியின் “ஆவ்”

மனோதத்துவ ரீதியிலான பிரச்சினைகளையும், பாலியல் வன்முறை உள்ளிட்ட சமூகப் பிரச்னைகளை பற்றியெல்லாம் பேசிய தெலுங்கு படம் ஆவ். தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றி பேசிய முதல் தெலுங்கு திரைப்படமும் இப்படம் வெளியான போதே, படத்தைப் பார்த்து பலரும் பாராட்டி இருந்தனர்.

இந்தப் படத்தில் நடிகர் நானி, இணை தயாரிப்பாளராக இருந்திருந்தார். ஆவ் திரைப்படம், 66வது தேசிய விருதுகள் பட்டியலில், சிறந்த கிராபிக்ஸ் மற்றும் ஒப்பனை கலைஞர்களுக்கான பிரிவில் இடம் பெற்று, இரு விருதுகளை பெற்றிருக்கிறது. இது பற்றி நானி கூறியிருப்பதாவது: முதல் தயாரிப்புக்கு இரு தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது நினைக்க சந்தோஷமாக இருப்பதாகவும் ஒட்டுமொத்த குழுவுக்கும் தன்னுடை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் என பதிவிட்டிருக்கிறார்.

 

 

கருத்து தெரிவிக்க