அழகு / ஆரோக்கியம்

இளமையை பாதுகாக்கும் சில பழங்கள் !

சந்தையில் கிடைக்கின்ற பழங்களில் உள்ள நன்மைகள் பற்றி நாம் அறிந்து கொள்ள தவறி விடுகின்றோம்.  ஊட்டச்சத்துகளின் சுரங்கமான இவற்றில் ஆயுளை அதிகரிக்கும் தன்மை நிறைந்துள்ளது மட்டும் அன்றி, இளமையையும்  பாதுகாக்கின்றது. அவற்றில் சில பழங்கள் பற்றி பார்ப்போம்.

அப்பிள்

அப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதில் உள்ள ஒரு வகை நார்ச்சத்து  தலைமுடிக்கு  பாதுகாப்பு அளித்து, பராமரிக்கின்றது. அதுமட்டும் அல்லாமல் இதில் உள்ள மாலிக் அமிலம் சருமம் பொலிவோடு இருக்க உதவுகின்றது.

பட்டர் புருட்

இதில் பயோட்டின், விற்றமின் ஈ என்பன நிறைந்துள்ளது. இது உடலுக்கு வழுவழுப்பு தன்மையை  தருகிறது. இளமையோடு இருக்கவும் உதவுகிறது.

வாழைப்பழம்

வாழைப்பழம் உடலில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும். தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கும்.

கிவி

கிவிப்பழத்தில் விற்றமின் சி நிறைய உள்ளது. இது சருமத்தை இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும்.

பப்பாசி

பப்பாசிப் பழத்தில் அதிக அளவில் சத்துகள் நிறைந்துள்ளன. பெரும்பாலான கிறீம் வகைகள் பப்பாசிப் பழத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. இயற்கையாகவே இதனை உபயோகிக்கும் போது நிறைந்த பலனை அடையலாம்.

மாதுளை

இதில் தாதுப்புக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது.  புற ஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாத்து இளமையாக இருக்க வழி வகுக்கும்.

 

கருத்து தெரிவிக்க