நூற்றுக்கு 70 வீதம் அளவில் பௌத்த மக்கள் வாழும் இந்தியாவின் லடாக் பகுதிக்கு தனியான பிராந்தியமாக அறிவிப்பதற்கு இந்தியா எடுத்துள்ள முடிவு குறித்து பௌத்த நாடு என்ற வகையில் ஸ்ரீலங்கா அரசு மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கத் தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி இரு மகாநாயக்கத் தேரர்களும் தமது கையொப்பத்துடன் மேற்படி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பௌத மதம் உதயமாகிய இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே காணப்படுகின்ற சமய, அரசியல், கலாசார தொடர்புகள் இதனால் மேலும் வலு அடையும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு சமயத்தவரகள் வாழ்வதுடன் பல்வேறு மொழி பேசுகின்ற மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் இது வரை சகவாழ்வைப் பாதுகாத்துள்ளதுடன் 70 சதவீத்திதற்கு மேல் பௌத்தர்கள் வாழ்கின்ற லடாக் பகுதிக்கு தனியான மானிலம் வழங்க எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக பௌத்த நாடு என்ற வகையில் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
கௌதம புத்தரின் அவதாரம் காரணமாக பரிசுத்தமடைந்த பாராத தேசம் மற்றும் இலங்கைத் தேசம் என்பவற்றிற்கு இடையே நீண்டகால தொடர்கள் காணப்படுகின்றன.
புத்த பிராண் மும்முறை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதுடன் தர்ம ஆசோகனின்(தர்மாசோக்க) மகன் மகிந்தனின் வருகையுடன் தேரவாத கோட்பாடு பரவியது. இதனால் பல்வேறு மருமலர்ச்சிகள் ஏற்பட்டன.
எனவே அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் லடாக் மானிலத்தில் வாழும் பாக்கியம் பெற்ற மக்களை வாழ்த்துகிறோம் பிராத்திக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க