இன்று வியாழக்கிழமை காலை (8) மன்னாருக்கு வருகை தந்தை அமைச்சர் சஜித் பிரேமதாச ஜேசப்வாஸ் நகர் இளைஞர்களுடன் சிறிது நேரம் உதைபந்தாட்ட விளையாட்டில் ஈடுபட்டார்.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஜேசப்வாஸில் நிர்மாணிக்கப்பட்ட 239 ஆவது மாதிரி கிராமமான ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 68 வீடுகளும், 230 ஆவது மாதிரிக்கிராமமான ஜேசப் புரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட 27 வீடுகளும் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு முடிவடைந்த நிலையில் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை விளையாட்டு மைதானத்தில் இளைஞர்களுடன் அமைச்சர் சஜித் பிரேமதாச உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்டார்.
இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மேகன்ராஸ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,அமைச்சர் றிஸாட் பதியுதீனின் செயலாளர் றிப்கான் பதியுதீன்,மன்னார் பிரதேச சபையின் தலைவர் எம்.முஜாகிர்,ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.பஸ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க