உள்நாட்டு செய்திகள்

மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்த பொன்சேகா!

அண்மையில் தமக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியையும், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பதவியையும் வழங்க, பாதுகாப்பு அமைச்சராக உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வந்தார் என, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன நேற்று முன்தினம் சாட்சியமளித்திருந்தார்.

அவரிடம் சாட்சியம் பெறுவதற்காக கேள்விகளை எழுப்பிய போதே, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டார்.

“அமைச்சரவை அந்தஸ்துடன் அமைச்சர் பதவியையும், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பதவியையும் வழங்குவதாக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சரே அந்த அழைப்பை அனுப்பியிருந்தார். நான் அதனை நிராகரித்து விட்டேன்.

ஏனென்றால், அந்தப் பதவியை வழங்கும் நோக்கம், எனது வாயை மூட வைப்பதேயாகும்.

இப்போது நாட்டில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, வாயை மூடிக்கொள்ள முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க