ஆரம்பகைத்தொழில் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டுதலில் சமூகசேவைத் திணைக்களம் மட்டு. மாவட்ட செயலகத்தின் அனுசரணையுடன் மட்டு.மாவட்ட மாற்றுத் திறனாளிகளின் திறன்களை மதிப்பீடு செய்யும் விழா இவ் ஆண்டிலும் இடம்பெற்றது.
குறித்த விழா மாற்றுத் திறனாளிகள் மாவட்ட விளையாட்டு விழா மட்டகளப்பு வெபர் விளையாட்டுஅரங்கில் வெகு விமர்சையாக இடம் பெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் குறித்த விழா இடம்பெற்றது.
இந்த விளையாட்டு விழாவில் இம் மாவட்டத்தின் 14 பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் இருந்து சுமார் 500 மாற்றுத்திறனாளிகள் பங்கு கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இங்கு வகைப்படுத்தப்பட்ட ஆண், பெண் மாற்றுத் திறனாளிகள் (ஓட்டநிகழ்வுகள், நீளம், உயரம் பாய்தல், குண்டு, பருதி வீசுதல், அஞ்சல் ஓட்டம் மற்றும் பாரம்பரிய பல விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்றனர்.
இதில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணித்கம் உதயகுமார், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இப்போட்டிகளில் திறமை காட்டியவர்களுக்கு திறமைச் சான்றிதங்களையும் சிறப்பு பரிசில்ளையும் வழங்கிவைத்தார்.
அத்துடன் இப்போட்டி நிகழ்வுகளில் கலந்துகொண்ட சகல மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இம் மாவட்ட போட்டிநிகழ்வுகளில் முதல் இடங்களை பெற்ற இவ் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகள் இவ்வாண்டின் தேசிய விளையாட்டுவிழாவில் பங்கேற்க தகுதி பெற்றதாக மாவட்ட சமூகசேவை உத்தியோகஸ்தர் திருமதி.சந்திரகலா யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூப ரஞ்சனி முகுந்தன், மாவட்ட கணக்காளர் கே.கேதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா என உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கருத்து தெரிவிக்க