உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

அக்கரபத்தனை சந்திரிகாமம் லய்ன் குடியிருப்பில் தீவிபத்து. 12 வீடுகள் சேதம்

தலவாக்கலை டயகம அக்கரபத்தனை நகரில் இருந்து 4 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள சந்திரிகாமம் பெருந்தோட்டத்தின் லய்ன் குடியிருப்பு ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதன்போது 12 வீடுகள் சேதமடைந்துள்ளன.

எனினும் எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. தீப்பரவலுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

பாதிக்கப்பட்ட சுமார் 60 பொதுமக்கள் தோட்ட பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க