அழகு / ஆரோக்கியம்

நோய்கள் தீர்க்கும் வெள்ளரிக்காய் சாறு !

வெள்ளரிக்காயில் அதிகளவான நீர் உள்ளது. இது உடலில் உள்ள தேவையற்ற கழிவுப் பொருட்களையும், இரசாயன நச்சுகளையும் அகற்றுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வெள்ளரிக்காய் பானம் தயாரிக்கும் முறை :

தேவையான பொருட்கள்,

வெள்ளரிக்காய் –   1

புதினா –  1/2 கப்

தண்ணீர் – தேவையான அளவு

தயாரிக்கும் முறை,

தேவையான அளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் சிறு துண்டுகளாக வெட்டிய வெள்ளரிக்காயையும், புதினாவையும் போட்டு நன்றாக கலக்கவும். பின்னர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விடவும். முழுதாய் ஒரு நாளுக்கு பின் எடுத்து அருந்தலாம்.

பலன்கள்

இந்த பானம் உடல் வறட்சியை போக்கும். சருமத்திற்கு புத்துணர்ச்சியை தருவதோடு, தோல் நோய்கள் வராமலும் தடுக்கும்.

உடலில் உள்ள திசுக்களை ஆரோக்கியமாக  வைத்துக் கொள்ள உதவும்.

கண்ணைச் சுற்றி உள்ள வீக்கம் கருவளையம் நீங்கும்.

எலும்புகளை பலப்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

பசியின்மையை சரி செய்யும்.

உடலுக்கு தேவையான விற்றமின்களையும் கனிமங்களையும் தருகிறது.

உடலில் ஏற்படும் நீர் இழப்பை தடுத்து, சரும நோய்களை இலகுவாக குணப்படுத்தும்.

கருத்து தெரிவிக்க