இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள்களுடன் ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பில்லை எனவும் தாக்குதல் தொடர்பில் அவர்கள் அறிந்திருக்கவில்லை எனவும் தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி உரிமை கோரியிருந்த போதும் அவ்வமைப்புடன் தொடர்பில்லை என குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் விசேட கண்காணிப்பாளர்கள் அதே போன்றதொரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
தாக்குதல்களை முன்னெடுத்த தேசிய தௌஹித் ஜமாத்தும் ஜே.எம்.டீ அமைப்பும் 2014 இல் உருவாக்கப்பட்டவை என ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.
தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு தாக்குதலுக்கு முன்னர் 50 உறுப்பினர்களை கொண்டிருந்தது எனவும் ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ஜே.எம்.ஐ அமைப்பு 2015இல் உருவாக்கப்பட்டதாகவும் அது சுமார் 150 உறுப்பினர்களை கொண்டிருந்ததாகவும் அவர்களில் பலர் சிரியாவிற்குச் சென்று ஐ.எஸ். அமைப்பிடம் பயிற்சி பெற்றனர் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் குறித்த தாக்குதல் தொடர்பில் ஐ நா முன்னதாக அறிந்திருக்கவில்லை என்ற அடிபபடயில் தாக்குதல்களுடன் நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை என கூறப்படுகிறது.
இதேவேளை நியூஸிலாந்தின் கிரிச்சற்ச்சில் இடம்பெற்ற தாக்குதல்களுடன் இலங்கை தாக்குதல்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் அதற்கு எந்த வித ஆதாரங்களும் இல்லை என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது,
கருத்து தெரிவிக்க