சினிமா

அஜித்தின் அடுத்த படத்தில் ஜான்வி; நிறைவேறும் ஸ்ரீதேவியின் ஆசை

நடிகர் அஜித் நடிக்க, இயக்குநர் எச்.வினோத் இயக்கி இருக்கும் படம் நேர் கொண்ட பார்வை வரும் 8ல் ரிலீசாகிறது. இதற்கான வியாபார மும்முரத்தில் படக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்க, இயக்குநர் எச்.வினோத் இயக்க, அடுத்ததாகவும் ஒரு படத்தை தயாரிக்க போகிறார் தயாரிப்பாளர் போனிக் கபூர்.
நேர் கொண்ட பார்வை படம் ரிலீசான கையோடு, அந்த படத்தின் படபிடிப்பைத் துவங்கவுள்ளதாகவும், இந்தப் படத்தில் நடிகர் அஜித்துக்கு வயதான கேரக்டர் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதேபோல, நடிகர் அஜித்தின் மகள் கேரக்டரில், போனிக் கபூர்-ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவிருப்பதாக அடுத்தகட்டத் தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் அஜித் படத்தில் தன்னுடைய மகள் ஜான்வி கபூரை நடிக்க வைக்க வேண்டும்; அதன் மூலம், அவர் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆக வேண்டும் என்பது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நீண்ட நாள் கனவு. அதை, இப்போது நிறைவேற்றுகிறார் படத்தின் தயாரிப்பாளரும்; ஜான்வியும் தந்தையுமான போனிக் கபூர் என்று சினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க