உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

இந்திய மீனவர்களை பார்வையிடுவதற்காக வவுனியா சிறைச்சாலை சென்ற அனந்தி!

வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஏழு பேரை சந்தித்து அவர்களின் விடுதலையை துரிதப்படுத்தவதற்காகவும், ஆறுதல் தெரிவிப்பதற்காகவும்  இன்று மதியம் வவுனியா சிறைச்சாலைக்கு முன்னாள் வடமாகாண சபை அமைச்சர் அனந்திசசிதரன் சென்றுள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் ஏழுபேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.
ஏழு மீனவர்களையும் நேரில் சென்று சந்தித்து அவர்களின் விடுதலையை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதற்காக இன்று வவுனியா சிறைச்சாலைக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த (27.07) அதிகாலை தொழில் நிமித்தம் கடலுக்குச் சென்ற இந்திய மீனவர்களின் படகில் டீசல் இல்லாத காரணத்தினால் தரித்து நின்ற படகை இலங்கை கடற்படையினால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நர்

குறித்த  ஏழு மீனவர்களையும் பார்வையிடுவதற்காகவும் மதுரையிலுள்ள பிரபல்யமான சட்டத்தரணி தீரன் திருமுருகனின் வேண்டுதலுக்கு அமைய நேரில் சென்று பார்வையிடுவதற்காக சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

டீசலை வழங்கி இலங்கை கடற்படையினர் தங்களை திரும்பி அனுப்பியிருப்பார்கள் என்று கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நம்பியிருந்தவர்களை இவ்வாறு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமது குடுபத்தினருக்கு இத்தகவல்களை வழங்குவதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தணைத்தூதுவர் பாலச்சந்திரனுடனும் கதைத்துள்ளதாகவும் இவர்களின் விடுதலை தொடர்பான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் மிக விரைவில் நாடு திரும்பவுள்ளதாக நம்புவதாகவும் அவர்களுக்கு ஆறுதல்களையும் தெரிவித்து வந்துள்ளதாக மீனவர்களைப் பார்வையிட்டுள்ள அனந்தி சசிதரன் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க