உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் குடிகொண்டுள்ள பிக்கு மனநோயால் பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை  நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின், ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பாரிய புத்தர் சிலை ஒன்றை நிறுவி அங்கு பௌத்த விகாரையை அமைத்து குடிகொண்டிருக்கும் கொலம்ப மேதாலங்கதேரர் தற்போது மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது

குறித்த தகவலை மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது, கடந்த வாரம் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய அறங்காவலர்கள் என்னை சந்தித்தார்கள் அங்கே முகாமிட்டு இருக்கும் பௌத்த தேரருக்கு எதிராக அறங்காவலர்கள் அளித்துள்ள புகாரை போலீசார் விசாரிக்க வில்லை என்று சொன்னார்கள்.

தொலைபேசியில் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் ஏன் பிக்குவை கண்டு விசாரித்து வாக்குமூலம் எடுக்கவில்லை என கேட்டேன்.

அதன்போது இல்லை ஐயா, பிக்குவுக்கு மனநிலை சரியில்லை இப்போது அவர் கொழும்பில் மனநல சிகிச்சை பெற்று வருகிறார். என்று எனக்கு பொறுப்பதிகாரி பதில் சொன்னார் எனவும் அந்த முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

[நிருபர் சண்முகம் தவசீலன்]

கருத்து தெரிவிக்க