உள்நாட்டு செய்திகள்புதியவைவணிக செய்திகள்

மரமுந்திரிகை அறுவடை அதிகரித்தது: இறக்குமதி இடைநிறுத்தம்

நாட்டில் இம்முறை மரமுந்திரிகை அறுவடை அதிகரித்துள்ள காரணத்தால் அதன் இறக்குமதியை இடை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மரமுந்திரிகை கூட்டுத்தாபன தலைவர் தர்மஸ்ரீ பண்டார கருணாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

மரமுந்திரிகை இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்படவுள்ளது.

மரமுந்திரிகை தொழில் துறையை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக வருடத்திற்கு 20 ஆயிரம் மெட்ரிக் தொன் மரமுந்திரிகைகள் தேவைப்படுகின்றது.

நாட்டின் கடந்த சில வருடங்களில் கிடைக்கப்பெற்ற மரமுந்திரிகை அறுவடை 10 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் மெட்ரிக் தொன் ஆக இருந்தது எனினும் இந்த வருட அறுவடை 2 மடங்காக அதிகரித்திரித்துள்ளது.

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மரமுந்திரிகை போதுமானதாக இல்லாத காரணத்தினாலேயே இறக்குமதியில் கவனம் செலுத்தப்பட்டது.

வருடம் தோறும் படிப்படியாக அதிகரித்து இம்முறை வெற்றிகரமான அறுவடையை பெற முடிந்திருப்பதாக மரமுந்திகை கூட்டுத்தாபன தலைவர் தர்மஸ்ரீ பண்டார கருணாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க