கண்டி எசல பெரஹர நிகழ்வுக்கு ஆகக்கூடிய பாதுகாப்பை வழங்க இராணுவம் தயாராக இருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவசரகால சட்டம் அமுலில் இருப்பதால் இராணுவத்திற்கு விஷேட பொறுப்பு உண்டு.
பெரஹர நிகழ்வு பாதுகாப்பிற்காக காவல்துறையினருடன் இணைந்து இராணுவத்தினர் விஷேட ஏற்பாட்டு குழுவுடன் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
படையினர் தற்பொழுது இந்த பகுதியில் தமது பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அமைதியான சூழ்நிலையால் எசல பெரஹராவாவை நடத்த நாம் எதிர்பார்த்துள்ளோம்.
இராணுவமும், கடற் படையினர் மற்றும் விமான படையினர் உள்ளிட்ட வீரர்களை கொண்டதான வலுவான பாதுகாப்பை வழங்க நாம் தீர்மானித்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க