முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்கசவின் புதல்வரும் பொதுஐன பெரமுனவின்பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஐபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள நாமல் ராஐபக்ச தலைமையிலான குழுவினர் இன்று காலை மத தலங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன் மதத்தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதற்கமைய யாழ் ஆயர் இல்லத்திறகுச் சென்று ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்துவரலாற்றின் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்றுவழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
இதன் பின்னர் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்திற்குச் சென்று ஆதீனக் குருமுதல்வர் ஞானதேசிக சோமசுந்தர சிவச்சாரிகள் சுவாமியைச் சந்தித்துக்கலந்துரையாடினார்.
இதையடுத்து யாழ் நகரிலுள்ள யாழ் நாகவுகாரைக்குச் சென்று வழிபாடுகளில்ஈடுபட்டார்.
இதன் பின்னர் நாகவிகாரையின் விகாராதிபதியைச் சந்தித்துக்கலந்துரையாடியிருந்தார்.
இச் சந்திப்புக்களில் பொலநறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றொசான் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் குறிப்பாக சிறிலங்கா சுதந்திராக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க