உள்நாட்டு செய்திகள்புதியவை

ஞாயிறு, பௌர்ணமி தின வகுப்பு தடைக்கு எதிராக மனு

ஞாயிற்றுக்கிழமை மற்றும் பௌர்ணமி கல்வி வகுப்புகளை தடை செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து இரண்டு மனுக்கள் இன்று (ஜூலை 29) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

விடுமுறைச் சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் பொருத்தமற்றது என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் கல்வி ஆசிரியர் டொக்டர் சுதத் திகுவராச்சி மற்றும் பெற்றோர் ஒருவரினால் ,இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை கல்விக்கு மேலாக கூடுதல் அறிவைப் பெறும் மாணவர்கள் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்மொழியப்பட்ட சட்டத் திருத்த பிரேரணையின் 3, 4 மற்றும் 2 (1) பிரிவுகள் அரசியலமைப்பை மீறுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.

கருத்து தெரிவிக்க